விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு என்கிற வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மண்டல உதவி இயக்குநர் (கல்வி) சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடிய பிறகு அனைவரையும் விழுப்புரம் மாவட்ட உதவி கல்வி அலுவலர் கலியவரதன் அவர்கள் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் கல்வி ஆய்வாளர் இராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உத்வேக உரையை வெங்கடேசன் அவர்கள் வழங்க, இனியன் அவர்கள் உயர்கல்வி குறித்த கானொளியோடு உயர்கல்வி விவரங்கள் பற்றி தெளிவுப்படுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டுநர் நாகலட்சுமி அவர்கள் படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு பெறுவது சம்பந்தமான கருத்துகளை வழங்கினார்.
மேலும் சென்னை சென்ட்ரல் புட்வேர் டிரைனிங் இன்ஸ்டிடியூட் அதிகாரி அந்நிறுவனம் நடத்தும் பயிற்சிகள் குறித்து விரிவாக பேசினார்.
எம். எம். டி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானதேசிகமணி விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார். நான் முதல்வர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் அவர்கள் அத்திட்டம் குறித்து கருத்தைப் பதிவு செய்தார்.

இறுதியில் விழுப்புரம் கிரீட் அறக்கட்டளை இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
இந்நிகழ்வில் ஜெயபாரதி அவர்கள் (வீட் டிரஸ்ட்) மாணவ மாணவிகள் வருகையை பதிவு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பைல், பேனா, நோட்பேட் எழுதும் நோட்டுகள் கொடுத்து உதவினார்கள். குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் மதியம் மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கவரை சிங்கனூர், புளிச்சபள்ளம், கொந்தமூர், வழுதரெட்டி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் அரசு பள்ளி ஆதி திராவிட மாணவ மாணவிகள் சங்கீத மங்கலம் பனையபுரம் பள்ளியிலிருந்தும் கலந்து கொண்டனர்.
என் கனவு கல்லூரி வழிகாட்டி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
