பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மாள் அவர்களின் 4வது ஆண்டு நினைவு நாளையொட்டி 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலப்பன் சாவடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளார் நல சங்க நிறுவன தலைவருமான திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா .கா பாண்டியராஜன் ,திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் ஊரகத் தொழில் துறை அமைச்சருமான கே.பெஞ்சமின், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான வி. அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.மேலும் இந் நிகழ்வில் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர் . கமலக்கண்ணன் இணைச் செயலாளர் சி.பி.ராஜேந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் கலைப்பிரிவு நிர்வாகி அரசன் , நகர செயலாளர் சத்யநாராயணன், வட்ட கழக செயலாளர் எஸ்.எஸ் எஸ். குமார் , பச்சையப்பன், சுசீந்தின் எஸ்.சீனிவாசன், மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தோழமை சங்கமான தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.