நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம், பல்லக்காபாளையம் பகுதியில் கடந்த 2007 முதல் ஸ்ரீ ரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் எக்ஸெல் தனியார் கல்வி குழுமத்தின் எக்ஸெல் தன்னாட்சி பொறியியல் இயங்கி வருகிறது…
இந்த கல்லூரியின் தலைவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே இந்த கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கல்லூரியில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து 5000க்கும் மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள தொட்டியம், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பட்டியலின மற்றும் எளிய மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் மாணவ,மாணவிகள் கல்லூரி விடுதி உள்ளது…
கடந்த 25ம்தேதி இந்த கல்லூரியில் வட மாநிலத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரமற்ற உணவு கூடத்தில் உணவு உட்கொண்ட மாணவ-மாணவிகள் இரவு உணவு சாப்பிட்டதால் சுமார்120க்கும் மேற்பட்டோருக்குஉணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கல்லூரியின் சுகாதார சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கல்வி என்பது எதிர்காலத்தைக் கட்டமைக்கும் தூணாகக் கருதப்படுகிறது.
அதில் மாணவர்கள் தங்கும் விடுதிகள், அன்றாட உணவு உண்ணும் உணவகங்கள் ஆகியவை அவர்களின் உடல் நலம், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்கான அடிப்படை வசதிகளாக விளங்குகின்றன. ஆனால் இவை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் போகும்போது, அங்குள்ள மாணவர்களின் வாழ்வில் பேராபத்து உருவாகக்கூடும் என்பதற்கான முக்கிய சான்றாக நாமக்கல் மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் எக்ஸல் தனியார் கல்வி நிறுவனத்தின் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் 5000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளனர். மாணவர்கள் இங்கு தினசரி சுகாதாரமற்ற உணவை உண்டு கல்வி பயிலும் சூழலில், கடந்த சில நாட்களில் அங்கு எதிர்பாராத சுகாதார பிரச்சினை உருவாகியுள்ளது.
மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
தொடர்ச்சியாக அங்கு உணவு உட்கொண்ட மாணவர்களில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளால் அவதிப்படத் தொடங்கினர். அவர்களில் சிலருக்கு, கல்லூரியில் உள்ள மருத்துவ முகாமில் முதற்கட்ட சிகிச்சை அளித்தனர்.
சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தங்க விக்னேஷ் தலைமையில் அங்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்கள் உட்கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆரம்பகட்ட ஆய்வில் உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில் சுகாதார விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெள்ள தெளிவானது.
மாணவர்கள் குடிக்கும் நீர் தொட்டிகள் கூட முழுமையாக சுத்தமாக வைக்கப்படாமல், புழுக்கள், மாசுகள் நிறைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை சுகாதார நெறிமுறைகள் பெரிதும் மீறப்பட்டுள்ளன.
இக்கல்லூரியின் சுகாதார சான்றிதழும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை முழுமையாக மதிப்பீடு செய்ய மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பூங்கொடி தலைமையிலான குழுவும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இந்த கடும் தவறுதல்களைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கல்லூரி நிர்வாகத்திற்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காலவரைமுறையின்றி கல்லூரியை மூட உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்கும் விடுதிகளும், உணவகங்களும், சமையல் கூடங்களும் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால், கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கல்வி நிறுவனங்களின் பொறுப்பின்மையைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
கல்வி நிறுவனங்கள் பெரும் கட்டணங்களை பெற்றுக்கொள்ளும் நிலையில், மாணவர்களின் அடிப்படை ஆரோக்கியத்தை கூட பாதுகாக்க முடியாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மாணவர்கள் தங்கும் விடுதிகள், உணவு வழங்கும் இடங்கள் ஆகியவை உயர்தர சுகாதார அளவுகோல்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கான அரசாணைகள் இருந்தபோதிலும், அதனை கண்மூடித்தனமாக புறக்கணித்ததே இந்த அவல நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த கல்லூரியில் மாணவர் வழிக்காட்டுதல் மன்றம் உருவாக்க வேண்டும், வட மாநில ஆண் தொழிலாளர்கள்மாணவிகள் விடுதியில் கழிப்பறையில் சுத்தம் செய்வதை பெண் தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்,ஏனோ தானோ என்கிற போக்கில் வட மாநிலத்தவர்கள் கல்லூரி வளாகத்தில் உணவை சமைக்காமல் எங்கோ இருந்து கொண்டு வருவது,

கல்லூரி வளாகத்திலே உணவை தயாரித்து தரமான உணவுகளை பல்லாயிரம் கொடுத்து படிக்கும் எங்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என ஆதங்கத்துடன் மாணவர்கள் தெரிவித்தனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வெளியில் சென்று அவர்கள் விரும்பிய உணவு சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பல ஆயிரங்கள் கொடுத்து படிப்பிற்காக வும்… தங்குமிடத்திற்காகவும், தரமான உணவும், சுகாதாரமான குடிநீரும் கிடைக்கும் என்று நம்பிக்கையில் தான் இந்த கல்லூரியில் சேர்ந்தோம்… புழு ஊறுகின்ற உணவை சாப்பிடவா எங்கள் பெற்றோர்கள் எங்களை படிக்க அனுப்பினார்கள்.. அவர்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான் வட மாநில தொழிலாளர்களை நீக்கி விட்டு தமிழர்களை நியமிக்க வேண்டும், தரமான உணவுகளை அவர்களை கொண்டு கல்லூரி வளாகத்திலே சமைக்க வேண்டும்.

மேலும் கல்லூரி விடுதி காப்பாளர்கள் மாணவ மாணவிகளை உரிய முறையில் கண்காணித்து அவர்களின் தேவைகளை
பூர்த்தி செய்ய வேண்டும்.

(ராஜ்குமார்-செய்தியாளர்-
யுகம் நியூஸ்)
