குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் , பல்லக்காபாளையம் பகுதியில் இயங்கி வரும் எக்ஸெல் கல்வி நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகூடங்களையும் தயாரிக்கப்படும்உணவுகளையும், மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டியில் சுகாதாரம் இல்லாமல் மிகவும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும், சுமார் 200- கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி வளாக உணவகத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி மற்றும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தர நிர்ணயச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும், உணவு பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்றாமல் மெத்தன போக்கோடும், அலட்சியப் போக்குடன் செயல்பட்ட எக்ஸெல் பொறியியல் கல்லூரி நிறுவனர் மற்றும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் நிர்வாகத்தினர் மீது துரித விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்ப்புலிகள் கட்சியின் குமாரபாளையம் தொகுதி மாவட்ட தலைமையின் சார்பாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு ஒப்புகை பெறப்பட்டது.
