சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர்,பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே. வெங்கடேசன் , தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா,முன்னாள் நீதிபதிகள் ஏ. திருநீல பிரசாத் ,எஸ்.முருகேசன் ,முன்னாள் காவல்துறை ஐஜி ராமசுப்பிரமணி ஐபிஎஸ், நாட்டுப்புறப் பாடகர் கலை மாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் அனிதா குப்புசாமி திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் ,இந்தியன் ஃபோரம் விருதுகள் துணைத் தலைவர் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகாதேவி, அண்ணாமலை பல்கலைக்கழக டீன் டாக்டர் வி. அம்பேத்கர், மாவட்ட முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி நாகநாதன் ஐஎப்எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்.

மேலும் இந்நிகழ்வில் பாரதிய ஹிந்து பரிவார் ஆன்மீக அணி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளரும், நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட தலைவியுமான ஆவடி பகுதியை சேர்ந்த சிவ. டி. ரங்கநாயகி அவர்களுக்கு திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி வருவதற்காகவும்,உழவார பணிகளை சமூக அக்கறையுடன் மேற்கொண்டு வருவதற்காகவும் சேவை செம்மல் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

