சென்னை :இந்தியன் ஃபோரம் அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஞானரத்னா மற்றும் சேவாரத்னா விருதுகள் வழங்கும் விழா சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைப்பெற்றது.


இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு நீதித்துறை முன்னாள் நீதிபதி டாக்டர் கே. வெங்கடேசன் , தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, முன்னாள் நீதிபதிகள் ஏ. திருநீல பிரசாத் ,எஸ்.முருகேசன் ,முன்னாள் காவல்துறை ஐஜி ராமசுப்பிரமணி ஐபிஎஸ், நாட்டுப்புறப் பாடகர் கலை மாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் அனிதா குப்புசாமி திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் ,இந்தியன் ஃபோரம் விருதுகள் துணைத் தலைவர் ராஜ்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகாதேவி, அண்ணாமலை பல்கலைக்கழக டீன் டாக்டர் வி. அம்பேத்கர், மாவட்ட முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி நாகநாதன் ஐஎப்எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.


மேலும் இந்நிகழ்வில்
மதிப்புறு முனைவர் கவிஞர் சி. ஞானப்பிரகாசம் ,(சுகாதார ஆய்வாளர், பெருநகர சென்னை மாநகராட்சி) அவர்களின் காகிதக்கனவுகள் எனும் கவிதை நூல் கடந்த ஜனவரி 2025 ல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இந்நூலில் கல்வி, சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம் ,
சமூக ஒடுக்கு முறைகள், மரம் நடுதல், கண் தானம் செய்தல் ,ரத்த தானம் செய்தல் ,ஆணவ கொலைகள்,
மழை, இயற்கை மற்றும் காதல் என அனைத்தையும் பேசும் நூலாகும்.

இந்த கவிதை நூல் இந்தியன் ஃபோரம்(INDIAN FORUM) அமைப்பினரால் சமூக விழிப்புணர்வுக்காண சிறந்த கவிதை நூலாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
(நூலினை பெற அழைக்கவும்: 99432 21970)
