சென்னை:
கவிதை உறவு. வானதி பதிப்பகம் சார்பில் எழுத்தாளரும், கல்வியாளருமான முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள்” என்கிற நூல் வெளியீட்டு விழா முகப்பேரிலுள்ள அமுதா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைப்பெற்றது

இந்நிகழ்வில் நீதியரசர் திரு. எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு
இந்நூலை வெளியிட்டார்.

மேலும் இந்நூலின் முதல் பிரதியை டாக்டர் வி.ஜி. சந்தோஷம், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இவ் விழாவில் முனைவர் வா.மு.சே. ஆண்டவர். முனைவர் முகிலை இராசபாண்டியன், வர்த்தகர் சங்கத் தலைவர் சந்திரன் ஜெயபால், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் புலவர் சு.மதியழகன், முனைவர். ஆதிரா முல்லை உள்ளிட்ட பெரியோர்கள், அன்பர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.