சென்னை:எக்விடாஸ் வங்கி மற்றும் அதன் அறக்கட்டளையான எக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் பி. என். வாசுதேவன், எக்விடாஸ் டிரஸ்ட் ப்ரோக்ராம் டைரக்டர் ஜான் அலெக்ஸ், எக்விடாஸ் டிரஸ்டி கரியாளி IAS ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் சென்னை சூளைமேடு அருகே உள்ள கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மன்றத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம் மருத்துவ முகாமில் கண், பல் பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், அக்குபஞ்சர்,பாத தொடு நரம்பு பரிசோதனை, குடல், கல்லீரல், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக அப்பகுதி மக்களுக்கு செய்து மருந்து மாத்திரைகள் மற்றும் மூக்கு கண்ணாடிகளை இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும் எக்விடாஸ் வங்கி மூலமாக பெண்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களால் தயாரிக்கபட்ட கைவினைபொருட்கள் மற்றும் விவசாயிகளின் நேரடி கொள்முதல் செய்த பொருட்களை கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது.

மேலும் இந் நிகழ்வில் எக்விடாஸ் டிரஸ்ட்டின் துணை தலைவர் கிறிஸ்டோபர், ஈக்விடாஸ் CSR மேலாளர்களான பாலக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சூளைமேடு கிளை மேலாளர் ஜெயக்குமார், MFI மேலாளர் சரவணன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இம்மருத்துவ முகாமை CSR துணை மேலாளர் கோபிநாத் சிறப்பாக ஒருங்கிணைந்தார்.

இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 400க்கும் மேற்பட்ட அப்பகுதி ஏழை எளிய பொதுமக்கள் பயன் பெற்றனர்.