கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின்
பொதுக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியிலுள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில்
பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர்
எஸ். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இதன் நிறுவன தலைவர்
முனைவர் என். எஸ்.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இதில் ஒருமனதாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன:
இம்மையத்தை வலுப்படுத்தி மக்கள் பணியாற்றிட. இம் மையத்தில் கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது,
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது,
தமிழகம் முழுவதும் அரசு ஆணையின் படி. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணியின் போது தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது,
அரசுபோக்குவரத்து கழக பேருந்து களில் பணிபுரியும் நடத்துனர், ஓட்டுனர் மற்றும் டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணியாளர் கள் பணியின் போது சீருடை அணிந்து,பெயர் வில்லை, பணி வில்லை அணிந்து பணிபுரியவும், இல்லையேல்
அவர்கள் மீது போக்குவரத்து துறை விதிப்படி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அரசு கூட்டுறவு நியாய விலைக்கடைகளில்
பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் உணவுப்பொருட்கள்
தரமானவையாகவும்,
பூச்சி,புழுக்கள் இல்லாமலும் வழங்கிட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,
உளுந்தூர் பேட்டை வட்டம்,திருநாவலூர் வட்டாரம், திருநாவலூர் ஊராட்சியில். அனைத்து பகுதிகளிலும். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்கிட வேண்டும்,
தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்துவரும் பொதுமக்களுக்கு குடியுரிமை பட்டா வழங்குவதோடு, தற்போது வசூலிக்கும் தரை வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இதில் பிரச்சார செயலாளர். டி. கந்தனாதன், துணை தலைவர்கள் வி. பன்னீர்செல்வம். ஆர். சதீஸ்குமார். செயற்குழு உறுப்பினர்கள். கோவிந்தராஜ், காமராஜ், நாராயணன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் மகளிரணி பொறுப்பாளர் கெளதமி அவர்கள்
நன்றியுரை நல்கினார்.
