தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரியார் மன்றத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில்மிக சிறப்பாக நடைபெற்றது
இதில் நாமக்கல் மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர், தோழர். இளமுருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினர்.
புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர் வீரமணி, புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் தோழர் அண்ணாமலை, நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர். சிவகுமார், மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர். தனுஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செய்தி தொடர்பாளர் தோழர் செந்தமிழன், மண்டல செயலாளர் தோழர். உதய பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநகரச் செயலாளர் தோழர் தட்சிணாமூர்த்தி அவர்கள் நன்றியுரை நல்கினார்.
மேலும் இதில் மாநில, மண்டல, மாநகர, பேரூராட்சி, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில், எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக ‘வெல்லும் தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் மிக எழுச்சிமிகு மாநாடு நடைபெற உள்ளதால்,இந்த மாநாட்டிற்கு நாமக்கல் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான நபர்களை அணி திரட்டும் வகையில் பகுதி வாரியாக மக்களை சந்தித்து துண்டறிக்கை கொடுத்தும், சுவர் விளம்பரம் செய்தும் அனைத்து பொறுப்பாளர்களும் களப்பணி செய்து இந்த எழுச்சிமிகு மாநாட்டினை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மாவட்ட செயற்குழு கூட்டத்தில்
ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் வகையில் மாநகர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நூற்றுக்கணக்கான பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் நீண்ட நேரமாக அமர கூட இடமில்லாமல் ரோட்டிலே நின்று கொண்டிருக்க கூடிய அவல நிலை நீடித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மிக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
நாமக்கல் கொண்டு செட்டிப்பட்டி கணபதி நகர் 39 வது வார்டு பட்டியலின பொதுமக்கள் வசித்து வரக்கூடிய பகுதிக்கு அருகில் கழிவுநீர் திட்டத்தை அமைக்க மாநகராட்சி மும்முரம் காட்டி வருகிறது. இந்த கழிவு நீர் திட்டத்தால் அப்பகுதியில் வாழக்கூடிய பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காது நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது கழிவுநீர் பயன்படுத்த
கூடிய நீரில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என சுட்டிக்காட்டி இந்த கழிவுநீர் திட்டத்தை கைவிட வேண்டி தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே கழிவுநீர் திட்டத்தினை மாநகராட்சிக்கு ஒதுக்குப்புறமாக வெளியே அமைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை இந்த மாவட்ட செயற்குழு கூட்ட தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்தப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அப்பகுதி பட்டியல் இன அருந்ததியர் மக்களுக்கு வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கு இடமில்லாத மாநகராட்சி நிர்வாகம் வழிபாடு நடத்த ஆலயம் அமைக்கும் வகையில் இடம் தேர்வு செய்து கொடுக்க வேண்டும் எனவும் இந்த மாவட்ட செயற்குழு வாயிலாக மாவட்ட மாநகர நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்,
தமிழ்நாட்டில் சாதிய வன்மத்தோடு சாதி வெறியர்களால் நடத்தப்படக்
கூடிய சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திடும் வகையில் சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டுமென இந்த மாவட்ட செயற்குழு கூட்ட தீர்மானத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டியலின சமூக மக்களின் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் பின் தங்கியுள்ள அருந்ததியரும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கும் எளிய முறையில் பிணையம் இல்லாமல் மானிய கடன் வழங்க மத்திய கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடன் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
