பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லியிலுள்ள கோல்டன் ஓப்புலன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் சமத்துவ தமிழ் புத்தாண்டு-2023 விழா குடியிருப்பு வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மேலும் கோல்டன் ஓப்புலன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர்.

இந்த சமத்துவ தமிழ்ப்புத்தாண்டு விழாவானது வளரும் தலைமுறையினருக்கு தமிழரின் தொன்மையான பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது.


இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இவ்விழாவில் குழந்தைகள் வீரமங்கை வேலுநாச்சியார், கொடிகாத்த குமரன், நவீன விவசாயி, தமிழ்க்கடவுள் முருகன், தென்னாட்டுடைய சிவ பெருமான் மற்றும் பல வேடங்களில் வந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவரும் விதமாக அமைந்தது.


கோல்டன் ஓப்புலன்ஸ் சிறார்களின் தமிழர் வீர விளையாட்டான சிலம்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவின் சிறப்பு நிகழ்வான பரத கலைக்குழுவினரின் தமிழரின் தொன்மை கலைகளில் ஒன்றான தப்பாட்டம் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. தப்பாட்டக்க குழுவினரிடம் இணைந்து குடியிருப்புவாசிகளும் தப்பாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.









விழாவின் முடிவில் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் விழாக்குழுவினர் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு விற்பனை அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இவ்விழாவில் பங்கேற்றவர்கள் இது போன்ற விழாவானது வளரும் இளம் தலைமுறையினருக்கு தமிழரின் பாரம்பரியத்தினை அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக அமைந்திருந்ததாகவும், இந்த சமத்துவ புத்தாண்டு விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து தன்னார்வலர்களையும் வெகுவாக பாராட்டுவதாகவும்
தெரிவித்தனர்.





இவ்விழாவிற்க்கு வந்திருந்தவர்களை விழாக்குழுவினர் வரவேற்று உபசரித்தனர்.
