திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பஸ் நிலையம் அருகே உள்ளது பாலாஜி டிஜிட்டல் பேனர் கடை இந்த கடையில் மேலாளராக பணியாற்றி வருபவர் வாணியம்பாடி அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் கடந்த ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் டிஜிட்டல் பேனர் அடிக்க 13ம் தேதி இரவு 8 மணிக்கு பாலாஜி டிஜிட்டல் கடைக்கு வந்து 4- 9 பேனர் ரூபாய் 700 க்கு அடித்துள்ளனர் அதே சமயம் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் எம் சி யும் தற்போது கிளைச் செயலாளருமான ஆர் கே சாமி என்பவர் வந்துள்ளார் இவர் விசிக கட்சி இளைஞர்களிடம் பேனருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார் 700 ரூபாய் என பேனர் அடித்தவர்கள் கூற ஏன் இவ்வளவு அதிகமாக பணம் வாங்குகிறீர்கள் என கேட்டு ஆர் கே சாமி டிஜிட்டல் கடை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிக்கு பேனர் அடித்து கொடுக்க வேண்டும் ஆனால் நான் கொடுக்கிறதை வாங்கிக்கொண்டு நான் கூறும் அளவுகளில் பேனர் அடித்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் இப்பகுதியில் நீ கடை நடத்த முடியாது என மிரட்டும் தோணியில் கூறியுள்ளார் அதற்கு மேலாளர் செல்வம் நீங்கள் கூறும் வகையில் ஓசியில் அடித்து கொடுக்க முடியாது எனக் கூறியதுடன் கடை வாடகை ஈபி பில் ஊழியர்கள் சம்பளம் என எங்களுக்கு ஆயிரம் செலவுகள் உள்ளது குழந்தை பெறுபவர்களுக்கு தான் வலி தெரியும் எனக் கூறியுள்ளார் இதை கேட்ட ஆர் கே சாமி வெகுண்டு எழுந்து நீ எங்கள் பகுதியில் கடை நடத்துகிறார் வருடம் முழுவதும் சம்பாதிக்கிறாய் எங்களுக்கு ஓசியில் தான் அடித்துக் கொடுக்க வேண்டும் என கூறிக்கொண்டே தகாத வார்த்தைகளால் திட்டி மேலாளரை கண்மூடித்தனமாக கண்ணம் மற்றும் கழுத்து பகுதியில் வேகமாக தாக்கியுள்ளார் இதனால் நிலைகுலைந்த மேலாளர் செல்வம் செய்வது அறியாமல் தடுமாறி நின்ற நிலையில் அங்கிருந்தவர்கள் ஆர் கே சாமியை விலக்கி கூட்டிச் சென்றுள்ளனர் இந்த சம்பவத்தால் மனம் நொந்து போன செல்வம் வீட்டிற்கு சென்று விட்டார் இரவு முழுவதும் வலி தாங்க முடியாமல் உறக்கமும் வராததால் 14ஆம் தேதி காலை அரசு மருத்துவமனையில்
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் காவல் நிலைய எஸ் எஸ் ஐ வீரவல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து செல்வம் கூற புகார் மனுவை எழுதினார் மேலும் வீரவல்லி பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்த வீடியோ காணொளியை தனக்கு அனுப்பும்படி கேட்டு வாங்கியுள்ளார் அதை வாங்க வேண்டிய அவசியம் என்ன எந்த நபருக்கு அந்த காணொளியை அனுப்பி வைத்தார் புகார் பெற்றுச் செல்ல வந்த எஸ் எஸ் ஐ வீரவல்லி ஆதாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன ? மேலும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் உள்ள செல்வத்திடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து கேட்டுள்ளார் சுதாரித்துக் கொண்ட செல்வம் வெற்று காகிதத்தில் கையெழுத்து இட மறுத்துவிட்டார் இவற்றை பார்க்கும் போது இவர் எவருக்காக வேலை செய்கிறார் என்கின்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை மேலும் பேனர் கடை உரிமையாளரிடம் போன் செய்து செல்வம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டாரா என்று கேட்டுள்ளார் இவற்றையெல்லாம் கணிக்கும் போது இவர்கள் பஞ்சாயத்து செய்ய நினைக்கிறார்களோ என சந்தேகம் எழுகிறது மேலும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் அதிகப்படியான வழக்குகள் பதியப்படுவதில்லை மீறி பதியப்படும் வழக்குகள் எல்லாம் வாகன ஓட்டிகள் மீதும் சாராய வியாபாரிகள் மீதும் தான் இவை மேல் இடத்திற்கு கணக்கு காட்டுவதற்காகவே தொண்ணூறு சதவீத புகார்களுக்கு இங்கு பஞ்சாயத்து பண்ணப்படுவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் மேலும் மேலாளர் செல்வம் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது தொடர்ந்து இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் என்பது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இது சம்பந்தமாக வீரவல்லியிடம் கேட்டதற்கு சி எஸ் ஆர் போட்டு விட்டதாக மழுப்பலாக பதில் கூறியுள்ளார் இது போன்ற சிஎஸ்ஆர்கள் காவல் நிலையம் தோறும் நூற்றுக்கணக்கில் கிடப்பில் உள்ளது அனைவரும் அறிந்ததே ஆகவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எஸ் எஸ் ஐ வீரவல்லி மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் பேனர் கடை மேலாளரை தாக்கிய அதிமுக பிரமுகர் ஆர்கே சாமி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தது மட்டுமில்லாமல் கைது செய்யப்பட வேண்டும் இவர் மீது எடுக்கும் நடவடிக்கையால் மட்டுமே ஆலங்காயம் காவல் நிலையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பது எல்லோருடைய கருத்தாக உள்ளது.