பெங்களூர்:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு   சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் தலைமை பண்பு பயிற்சி, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் ,புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வேர்ல்ட் சிட்டிசன் அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஜோசப் அவர்களின் தலைமையில், கர்நாடகா  மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது . 

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மகாத்மா காந்தி அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தேசிய மகளிர் அணி தலைவி டாக்டர் அமலோற்பவ ராணி, கர்நாடக மாநில பொதுச் செயலாளர்  ஆண்ட்ரூ, இணைச் செயலாளர் தேவராஜ் , பெங்களூர் மகளிர் அணி செயலாளர்  நாகரத்தினம், தும்கூர் மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் சஞ்சய் குமார், மாநில மகளிர் அணி, மக்கள் தொடர்பு அதிகாரி கலாவதி , ஆர். கே .நகர் இளைஞர் அணி செயலாளர் விஜய் மற்றும் செயல் உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

மேலும் இந்நிகழ்வில்  ஓசூர் அரசு மருத்துவமனை பணியாளர் மற்றும் பல்துறை சாதனையாளர் முனைவர் வி. கண்ணகி அவர்களுக்கு  வைர தாரகை விருது, சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் Dr.U. விஜய பானு அவர்களுக்கு சர்வதேச சிறப்பு விருது , டாக்டர் மாலதி அவர்களுக்கு சர்வதேச சமூக சேவகர் விருது,  கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த  பிரனீத் குமார் அவர்களுக்கு தேசிய ஆன்மீக தலைவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.