சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள் தலைமையில் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். இராஜா சாமுவேல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கல்லூரி முகப்பில் கம்பீரமாகத் தோன்றும் நிறுவனர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மையர் முனைவர் ஆர். சுபாஷினி அவர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் வாழ்க்கையைச் சமூகப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்ட நிறுவனரின் நினைவுச் சொற்பொழிவில், புதுதில்லி, திறன் மேம்பாட்டு ஆணையகத்தின் மனிதவளத்துறை உறுப்பினர் முனைவர் ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உணர்வுப்பூர்வமான கருத்துகள் குறித்தும், கல்லூரி நிறுவனரின் நினைவைப் போற்றியதுடன் சமூகப்பணியின் முக்கியத்துவம் மற்றும் கல்வி மேம்பாடு குறித்தும், நமது இந்திய நாடு இளைஞர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது என்றுக்கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

தனிமனித மாற்றமே சமூக மேம்பாட்டைக் கொண்டு வரும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததுடன், அதற்குச் சமுதாயத்தில் நிலவும் சமூக அவலங்களுக்கு எதிரான குரல் கொடுப்பதே சிறந்த தீர்வாக அமையும் என்றும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் கல்லூரியின் வைரவிழா ஆண்டிலிருந்து(2012) வாழ்நாள் முழுவதும் சேவையாற்றுவதை இலட்சியமாகக் கொண்ட நிறுவனரின் பெயரில் வழங்கும் விருது இந்த ஆண்டு தொழிலாளர்களின் உரிமை, பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்வதில் அக்கறை கொண்டிருக்கும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசகர் ஸ்டீபன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இக்கல்லூரியின் செயலர் முத்துக்குமார் தாணு அவர்கள் இச்சங்கத்திற்கு நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும் விருது பெற்ற ஸ்டீபன் அவர்கள் தொழிலாளர்களுக்கான சங்கம் தொடங்கியதன் நோக்கம், தொழிலாளர்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், தொழிலாளர்கள் உரிமை குறித்த புரிதலையும், அவர்களிடம் உண்டாக்குவதில் தீவிரமாகச் செயல்படுகிறது என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள் அடைந்த பாதிப்பைப் பார்த்து இப்படியான ஒரு விழிப்புணர்வு சங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தொடங்கி, இயங்கி வரும் இந்தச் சங்கத்தை அங்கீகரித்து விருது வழங்கி கௌரவித்த சென்னை சமூகப்பணி கல்லூரிக்கு தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இறுதியில் இக்கல்லூரியின் சமூகப்பணித்துறைத் தலைவர் ஜெஸ்வின் ஜான் போஸ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பேராசிரிய மேன்மக்கள், மாணவ, மாணவிகள் திறளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் அனைவரும் வாழ்நாள் முழுக்க மனிதநேய சிந்தனையுடன் வாழவேண்டும் என்ற சிந்தனை விதைகள் என்கிற கருத்துக்கள் மாணவர்களிடையே விதைக்கப்பட்டது.