திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்க திண்டுக்கல் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் எஸ்.விஜயலட்சுமி அவர்கள் தலைமையிலும்,எம்.சுசிலா அவர்கள் முன்னிலையிலும் திண்டுக்கல் மாவட்டம்.ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வரவேற்றார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநில தலைவர் மனிதநேயர் முனைவர்.நா.சு.செல்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் பணியாளர்களுக்கு மாதம் முப்பது நாட்கள் கணக்கிட்டு ஊதியம் வழங்க வேண்டும்,
வார ஓய்வு, மாத விடுமுறை பண்டிகை கால அரசு விடுமுறைகள் ஊதியத்துடன் வழங்கிடவும், பணிப்பாதுகாப்பு,இலவசசீருடை,,அடையாள அட்டைகள், உள்ளிட்டவைகள் வழங்கிட வேண்டும், இப்பணி வழங்கிய மான்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்.தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்.ரமாத்தாள் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
