வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு!

சென்னை:
வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக திரு.வி.க நகர் தொகுதி வடக்கு கிழக்கு மாவட்டம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் ஆலோசனை படி
சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மற்றும் திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் பா. தாயகம் கவி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவர்
முனைவர். பொறியாளர் பி.ஜெ.செங்கை சத்யா அவர்களின் ஏற்பாட்டில்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 74 வது வட்டத்திற்கு உட்பட்ட
நேரு நகர்,ஜோதி நகர் 1 மற்றும் 2 வது தெருக்களில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் உள்பட சுமார் 150 நபர்களுக்கு பாய், பெட்ஷீட ரொட்டி,கோதுமை மாவு மற்றும் ரவை போன்ற அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொறியாளர் அணி மாநில,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக செயல் வீரர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சென் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷீலா வெங்கடேஷ்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
மாவட்ட அமைப்பாளர் உதயா,
மாவட்ட துணை அமைப்பாளர் நிலவழகன்,
துறைமுக அதிகாரி ஷெட் மாஸ்டர் ஆறுமுகம்
ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.