கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி
ஏ.கே.டி. கூட்ட அரங்கில்
மாநில துணை தலைவர். வி. பன்னீர்செல்வம் தலைமையிலும்,
மாநில பொருளாளர் பி. குமார் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இதன் நிறுவனர்
மனிதநேயர் முனைவர் நா.சு செல்வராஜ் அவர்கள்
பி. வி. ரமேஷ். மாநில தலைவர்,
வி. பன்னீர்செல்வம். மாநில துணை தலைவர்,பி. ஜெயபிரகாஷ். மாநில பொதுச்செயலாளர்.
கே.சதீஷ்குமார். மாநில துணைபொதுச்செயலாளர்,
பி. குமார். மாநில பொருளாளர்.
ஜி. சத்தியமூர்த்தி. மாநில துணை பொருளாளர்,
ஏ. டி. சக்தி வேல். மாநில அமைப்பு செயலாளர்,
டி. கந்தநாதன். மாநில பிரச்சார செயலர்
எஸ். சக்திவேல். மாநில இளைஞரணி தலைவர்,
எஸ். தமிழ் செல்வன் மாநில இளைஞரணி செயலாளர்,
மாநில செயற்குழு உறுப்பினர் களாக.பி. ஆறுமுகம். என். மோதிலால் சிங்.
கே. காமராஜ். பரசுராமன்,ஆர். சரவணன். வி. மாயக் கண்ணன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
1.புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக அரசுக்கும். தமிழக முதல் வருக்கும் வாழ்த்துக்கள்,
2.புதிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அருள் விக்னேஷ்க்கும் வாழ்த்துக்கள்,
3.தேர்தல் வாக்குறுதிகளான வேளாண் கடன் தள்ளுபடி. 200 யூனிட் இலவச மின்சாரம். வருடத்திற்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், மகளிர் உரிமை தொகை 2500 உள்ளிட்ட அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்ற வேண்டும்.
4.முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலதிட்டங்களை தொடரந்து நடத்த வேண்டும்,
5.தமிழகத்தை மது,போதை இல்லா மாநிலமாக மாற்றிட வேண்டும், அதற்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும். கஞ்சா. அபின் உள்ளிட்போதைபொருட்கள் தமிழ்நாட்டிற்குள் கடத்தி வருவதை தடுத்திடவும். தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்யப்படுவதை தடுத்திடவும் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
6.பெண்கள்.சிறுமிகள்.சிறுவர்கள்மீது நடத்த ப்படும் பாலியல் குற்றங்களை தடுத்திடவும் இத்தகைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது சட்டம் இயற்ற வேண்டும்.
7.மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டு. அலுவலர்களை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்யும் எவரையும் கைது செய்து சிறையிலடைக்கவும். . அரசியல் வாதிகளுக்கு துணையாக மக்கள் பணி செய்யாத அரசு அலுவலர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.பொதுமக்களிடம் லஞ்சம்
வாங்கும். அரசு அதிகாரிகள். அரசியல் கட்சியினர். அமைச்சர்கள் உள்ளிட வர்களை கைது செய்து பணிநீக்கம் செய்யவும் சிறையிலடைக்கவும். அவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவும் சட்டம் கொண்டு வர வேண்டும்.
9.கல்லக்குறிச்சி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை. ஆடு. மாடு. மீன். கோழி இறைச்சி களின் கழிவுகளை இடுகாட்டில் கொட்டி வைத்து பெரும் துர்நாற்றத்தை. சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துவதை நகராட்சி கைவிட்டு. மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் சேமிக்க வேண்டும்.
10..கல்லக்குறிச்சி நகரில் இருந்து பிற முக்கிய இடங்களான. ராமேஸ்வரம். திருச்செந்தூர். வேளாங்கண்ணி. பழனி. ஊட்டி. கன்னியாகுமரி.. மகாபலி புரம் ஆகிய இடங்களுக்கு அரசு பேரூந்து சேவையை உடனே துவக்கிட வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் கே. சதீஷ்குமார். நன்றியுரை ஆற்றினார்.
