திருவல்லிக்கேணி:
மறைந்தும் மக்கள் மனதில் வாழும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று பெரிதும் போற்றப்படும் ஜனாப் முகம்மது இஸ்மாயில் சாகிபு அவர்களின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)
சார்பில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் துயிலிடத்திற்கு (ஜியாரத்),
தமிழ்நாடு சுன்னத் ஜமாத்
மாநிலப் பொதுச் செயலாளர் ஜனாப்
அ.அக்ரம்கான் அவர்களின் தலைமையில், மாநிலப் பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் மலர் போர்வை அணிவித்தும், துஆ (பிரார்த்தனை) செய்தும், சிறப்பான முறையில் புகழ் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில்​ எஸ். சையது கௌஸ் – மாநில பொருளாளர்,
​எம். சுலைமான் மனபாய் – மாநில அமைப்பாளர்,
​எஸ்.பூவை யாசின் – மாநில துணைத் தலைவர்,அ. ரஹ்மான்கான் – மாநில இளைஞரணி தலைவர்,
​எஸ்.முகமது ஆகில் – மாநில செய்தித் தொடர்பாளர்,
​ஜனாப் இருஷத், எப்.சேட்டு, எஸ் தஸ்தாகீர், ஹுசைன், இஸ்மாயில், இனாயத் ஷரீப் மற்றும்
ஜமாத்தின் முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்துக்கொண்டு
​கண்ணியம் போற்றுவோம், காயிதே மில்லத் அவர்களின் வழி நடப்போம் என்கிற உயரிய நோக்கில் புகழ் மரியாதை செலுத்தினர்.