சென்னை:
சைதாப்பேட்டை பகுதியில், 142-வது வார்டிற்குட்பட்ட ஜீனிஸ் சாலையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில், உணவு வழங்கும் நேரத்தில், அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் மூக்குப்பொடி பயன்படுத்தியவாறு பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாகத் கூறப்படுகிறது.

மேலும் உணவு தயாரித்தல், கையாளுதல் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணிகளில், உரிய உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

இத்தகைய செயல்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், உணவின் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

எனவே மேற்கண்ட அம்மா உணவகத்தில் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும் அம்மா உணவகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.