புளியந்தோப்பு:காங்கிரஸ் கட்சி சார்பில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 77 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுமதி புத்தநேசன் அவர்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ராஜா தோட்டம், குருசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குகள் சேகரித்தார்.

மேலும் இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் வேட்பாளரிடம் எங்கள் பகுதியில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசு அதிகரித்து வருவதால் எங்களது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணும்படி வேட்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். வேட்பாளர் சுமதி புத்தநேசன் கண்டிப்பாக இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார்.

மேலும் இந்த வாக்கு சேகரிப்பின் போது எஸ்.சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் புத்தநேசன், 77 வது வட்ட தலைவர் செல்வம், மத்திய சென்னை மேற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ராஜலட்சுமி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுமதி, எழும்பூர் பகுதி துணைச் செயலாளர் வாணி ஸ்ரீ விஜயகுமார்,பகுதி அமைப்பாளர் நாவரசன் மற்றும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.