சென்னை : சென்னை மாநகராட்சி துறைமுகம் தொகுதிக்குட்பட்ட 57- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெற்றிலை கே.மாரிமுத்து அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நாராயண முதலி தெரு, காசி செட்டி தெரு, அண்ணா பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வாக்குகள் சேகரித்தார்.
இந்த தேர்தலில் என்னை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் இந்த வார்டு மக்களுக்கே முழுநேரமும் உழைப்பேன். அடிப்படை வசதிகளை செய்து தருவேன். எந்த நேரமும் மக்கள் என்னை அணுகலாம்.
இப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடும்பங்களை வெளியிடங்களுக்கு அப்புறப்படுத்துவதை தவிர்க்க இந்தப் பகுதியிலேயே தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பும், வியாபாரிகளுக்கு வணிக வளாகமும் அமைத்திட முயற்சி செய்வேன் என்று பிரச்சாரம் செய்து ஓட்டு கேட்டார்.
அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கண்டிப்பாக இரட்டை இலைக்கு வாக்கு அளிப்பதாகவும் உறுதி அளித்தனர்.
