சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் விடுதலை கழக பொதுச் செயலாளர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமுதாயத் தலைவர்களின் சேவைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

ஆம்பூர் பகுதியில் மக்கள் தொண்டாற்றி வரும் சமூக ஆர்வலர் அகில இந்திய உழைப்பாளர் மக்கள் கட்சி தலைவர் ஆம்பூர் ஜார்ஜ் அவர்களின் சமுக சேவையை பாராட்டி ஜெய்பீம் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் நீதிக் கட்சி தலைவர் அம்பேத்கர் வெங்கடேஷ், பறையர் தேசம் நிறுவனர் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, அம்பேத்கர் முன்னணி கழக தலைவர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, அபயம் அமைப்பின் நிறுவனத் தலைவர் லெமூரியார், அம்பேத்கர் புரட்சி புலிகள் தலைவர் கிருஷ்ண பறையனார், அம்பேத்கர் பேரவைத்தலைவர் அன்புதாசன், அம்பேத்கர் மக்கள் படைத் தலைவர் மதி பறையனார், அம்பேத்கர் புரட்சி முன்னணித் தலைவர் துரைராஜ், ரெட்டைமலை சீனிவாசன் பேரவைத்தலைவர் ரேவதி நாகராஜன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செக்யூலர் அருண்குமார், வழக்கறிஞர் பொன்னுசாமி, பறையர் ஆட்சி அதிகார மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அன்பின் பொய்யாமொழி, ஆதித்தமிழர் விடுதலை இயக்க தலைவர் வினோத், இரட்டைமலை சீனிவாசனார் மக்கள் இயக்கத் தலைவர் ராமமூர்த்தி, சமூக நீதி கட்சி தலைவர் அம்பேத்கர்தாசன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல சங்க தலைவர் சுடர் குரு, மூத்த தலைவர் திருவள்ளுவன், இந்திய குடியரசு கட்சி தலைவர் சுந்தர பிரதாபன், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் தலைவர் இளவரசு பாண்டியன், ஆகியோருக்கு ஜெய்பீம் விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் விடுதலை கழகத்தின் மாநில செயலாளர் வீரத்தமிழன் நன்றி நல்கினார்….