திருவொற்றியூர்: திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் மாநில கபடி வீரருமான பெப்சி தனா என்கிற மூத்த வழக்கறிஞர் தன்ராஜ் அவர்களுக்கு சங்க நிர்வாகம் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் சங்க அலுவலகத்தில் மரியாதை பாராட்டு விழா நடைப்பெற்றது.

கபடி விளையாட்டில் அவர் தமிழ்நாடு அணிக்காகவும் மற்றும் சென்னை பல்கலைக்கழக கபடி விளையாட்டு வீரர், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி அணித்தலைவர் போன்ற அவர் பெற்ற பெயரும், புகழையும் அங்கீகரித்து பெப்சி குளிர் பானம் நிறுவனம் அதன் வளர்ச்சிக்கு விளம்பர தூதராக அவருக்கு கொடுத்த அங்கீகாரம் மற்றும் பாராட்டுதலையும் விட
திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆர். வசந்தகுமாரி மற்றும் கூடுதல் இணை செயலாளர் நளினி, செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன் மற்றும் முஹம்மது இதிரிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள்
ஏற்பாட்டில் முன்னாள் சங்க தலைவர் என். வெங்கடேசன். முன்னாள் செயலாளர் என். சரவணன் நிர்வாகிகள்
வழக்கறிஞர்கள் ராஜேஷ்,
ரமேஷ் மற்றும் சக வழக்கறிஞர் சகோதர, சகோதரிகளின் பாராட்டுகள் உண்மையில் என்னை பழைய 1985- 1995 காலகட்ட நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுது என பெருமிதப்பட்டார்.

மேலும்
திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க தலைவர் பெப்சி தனா என்கிற
சி. தன்ராஜ் அவர்கள் அனைவருக்கும் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இச்சங்கத்தின் தலைவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது .
ஒரு மாபெரும் விளையாட்டு வீரர் இச் சங்கத்தின் தலைவர் என்று சொல்ல எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
பாராட்டு விழா நிகழ்ச்சி குறித்து முன் கூட்டியே சொல்லி இருக்க வேண்டும் எனவும்,அப்படி சொல்லாதது வருத்தம் அளிக்கிறது என நண்பர்கள் தெரிவித்தனர்.
அப்போது எனது உயிர் நண்பன் சரவணன் மற்றும் வெங்கடேசனை தேடிப்பார்த்த போது அவர்கள் அதுக்குள் சென்று விட்டனர் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும் சங்க தலைவர் தன்ராஜ் என்கிற பெப்சி தனா அவர்களுக்கு ஆண்டு விழாவின் போது நீதி அரசர்கள் முன்பு விழா எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனவும்
இது அனைவரின் கருத்து எனவும்,
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் எனவும்,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நான் பைசன் படம் பார்த்தேன்,
அவர் கூறியது போல ஒரு விளையாட்டு வீரரின் வாழக்கை ரொம்ப கடினமானது.
அவர் கடந்து வந்த சோதனைகளை அப்போது நினைத்து பார்த்தேன்.
உண்மையில் நீங்க தான்
உண்மையான பைசன்
(காளமாடன்) எனவும் தெரிவித்தனர்.
மேலும் தன்ராஜ் அவர்கள் இது போல மகிழ்ச்சியான நினைவலைளை மீண்டும் நினைத்து பார்க்கும் போது
கண்கள் கலங்குகிறது,
இதயம் கணக்கிறது.
கண்ணகி நகருக்கே பெருமை தேடித்தந்த கண்ணகி நகர் கார்த்திகா தங்கம் வென்ற செய்தி
மற்றும் பைசன் படம் பார்த்ததன்
எதிரொலி நான் கடந்து வந்த பாதைகளை நினைவு கூர கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் சட்டகல்லூரி சேரவில்லை என்றால் நானும் கபடி வீரராக வெற்றி வாய்ப்பை பெற்று இருக்கலாமே என்று எண்ணும் போதுசுகமான வலி என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
