பெரம்பூர் : ஏப், 29
சென்னை மாநகராட்சி வருவாய் துறை சார்பில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வட மாநில தொழிலாளர்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், மகிழ்விக்கும் நோக்கில் மேஜிக் ஷோ நிகழ்வு பெரம்பூர் , ஜமாலியா பகுதியில் மண்டலம் – 6ல் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.
உலகையே அச்சுருத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்ககை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு தடை உத்தரவை அமல்படுத்தி , பின்னர் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த உத்தரவினால் தமிழகத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு எந்த ஒரு சேவையும் செயல்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் தங்க இடம் இல்லாமல் சாலைகளில் வசிப்போர் மற்றும் வயிற்று பிழைப்புக்காக வெளி மாவட்டத்தில் இருந்தும்,வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்கள் முன்பு பணியிலிருந்த இடங்களிலிருந்து வெளியேறி இதர நகரங்களுக்கோ, ரயில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கோ வந்து வெளியில் இருந்தால், அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து உணவு, மருத்துவ வசதி செய்து தருமாறு தமிழக முதல்வரின் உத்தரவின் படி பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பாக தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்து ஒரே இடத்தில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படமால் இருக்க அவர்களுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் அவர்களது மீது சிறப்பு கவனமும் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை திரு.வி.க.நகர் 6 வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் மனஅழுத்ததை போக்கவும்,மகிழ்விக்கவும் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது.

இந்த மேஜிக் ஷோ நிகழ்ச்சியை அங்கு தங்கியிருந்த வடமாநிலத்தவர்கள் சமூக இடைவெளியோடு அமர்ந்து கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் நடைப்பெற்று வருகிறது
