கோடம்பாக்கம் : கொரோணா தொற்று பரவல் காரணமாக பல் வேறு தரப்பு மக்களும், ஏழை, எளிய சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர் சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவிலுள்ள பாலகிருஷ்ணன் அறக்கட்டளை ஏழை எளியோருக்கு அரிசி, உணவு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் முதியோர் இல்லத்திற்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் சார்பாக கொரோனா பெருந்தொற்று நலத்திட்ட உதவியாக மாதாந்திர மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வின் போது அறக்கட்டளையின் நிர்வாகிகளான துரை, செந்தில் அருள், ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்