சென்னை : ஏ.வி.எஸ் கார்டியாக் சென்டர் சார்பில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் உறுப்பினர்களுக்காக இருதய நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் திருவல்லிக்கேணி ஷிபா வளாகத்திலுள்ள ஏ.வி.எஸ் கார்டியாக் சென்டரில் நடைபெற்றது.

இந்த பரிசோதனை முகாமில் டாக்டர்.ஆர். விமல்குமார்,இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.எஸ். ஏ. சுயம்புலிங்கம் ஆகியோரது தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இ.சி.ஜி, சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. இலவச எக்கோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அதற்கான இதய நோய் மருத்துவர்கள் பரிசோதித்து, ஆலோசனை வழங்கினர்.இதில், இதய அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்முகாம் குறித்து இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.எஸ். ஏ. சுயம்புலிங்கம் கூறுகையில்,கொரோனா காலத்திற்கு பிந்தைய காலக்கட்டத்தில் பொதுமக்களிடையே
இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. நீரிழிவு,ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி மற்றும் சமூகத் தொடர்பின்மை போன்றவையே இதய நோய்களை அதிகரிக்கக் கூடிய முக்கியமான ஆபத்துக் காரணிகளாக உள்ளன.இருப்பது ஓர் இதயம்தான் என்பதால் அதனை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம்” என்றார்.

மேலும் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி,இதய அறுவை சிகிச்சை, இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய வால்வு அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர் சிகிச்சை, டயாலிசிஸ் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை இவை அனைத்தும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏ.வி.எஸ் கார்டியாக் சென்டரில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவர்களின் இலவச ஆலோசனை ஆகியவை வழங்கப்பட்டு
இம்மருத்துவமனையில் இதுவரை 75-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ் சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு : ஏ.வி.எஸ் கார்டியாக் சென்டர்,
ஷிஃபா வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை -600005,
தொடர்புக்கு :63822 91261, 044 2858 6363 / 044 45495273.