தியாகராய நகர்: அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்ற பேரவையின் இரண்டாம் ஆண்டு விழா, அருட்பிரகாச வள்ளலார் அவதார பெருவிழா மற்றும் சித்ரகுப்தர் சித்திரை பௌர்ணமி விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை தியாகராயநகர்,
தக்கர் பாபா, வினோபா ஹாலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்ற பேரவையின் தலைவர் எம்.எஸ்.சரவணன் பிள்ளை அவர்கள் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர்களான ஆர்.கோட்டீஸ்வரன் பிள்ளை,ஜெ.வேணுகோபால் பிள்ளை, எஸ்.கே.எஸ்.மூர்த்தி பிள்ளை, கௌரவத் தலைவர்களான ஜி.பார்த்திபன் பிள்ளை, டி.வள்ளுவன் பிள்ளை, வி.இராஜேந்திரன் பிள்ளை, கௌரவ ஆலோசகர் வி.கே.துரைப் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந் நிகழ்வில் இப் பேரவையின் பொதுச் செயலாளர் சுகுமார் பிள்ளை அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
துணைத்தலைவரான தாமோதரன் பிள்ளை அவர்கள் அறிமுக உரை ஆற்றினார்.
இந்த நிகழ்வை பேரவையின் பொருளாளர் டி.ஜி. தாயுமானவன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் போர்வாள் சிலம்ப கூடத்தின் மாணவ, மாணவிகளின்
சிலம்பாட்ட நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவிகள்
பங்குப்பெற்ற இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
மேலும் பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைகள், கலைப் இசை போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அனைத்து கருணீகப் பிள்ளைமார் முன்னேற்ற பேரவையின் நிர்வாகிகள் மற்றும் புரவலர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் துணைத்தலைவர் களான வேணுகோபால்பிள்ளை, தாமோதரன் பிள்ளை, எஸ்.கே.எஸ். மூர்த்தி பிள்ளை, சண்முகம்பிள்ளை, ஆர்.கோட்டீஸ்வரன் பிள்ளை,எஸ். கிருஷ்ணமூர்த்திபிள்ளை,
இணைச் செயலாளர்கள் எம். சிவகுமார் பிள்ளை, எம். அமிர்தகணேஷ் பிள்ளை, வி.சந்திரன் பிள்ளை,எஸ் சண்முகம் பிள்ளை, ஜீ. சண்முகராஜ் பிள்ளை,இணைச் செயலாளர்களான சீனிவாசன் பிள்ளை அச்சுத ரமேஷ் பிள்ளை, டி.ஏழுமலை ஏழுமலை பிள்ளை, கௌரவத் தலைவர்களான வி.ராஜேந்திரன் பிள்ளை, டி.வள்ளுவன் பிள்ளை, ஜி.பார்த்திபன் பிள்ளை, வி.ஸ்ரீராமன் பிள்ளை,
என்.நடராஜன் பிள்ளை,
கே.நடராஜன் பிள்ளை,
வி. இராமலிங்கம் பிள்ளை,
கௌரவ ஆலோசகர்களான எல். சந்தானபாபு பிள்ளை,வி.கே.துரை பிள்ளை,டி.இளங்கோவன் பிள்ளை,எஸ்.தண்டபாணி பிள்ளை,வி.சாய்பாலாஜி பிள்ளை,இ.யுவராஜ் பிள்ளை,பி.எஸ்.ஏகாம்பரம் பிள்ளை,சட்ட ஆலோசகர்களான பி.சீனிவாசன் பிள்ளை, கே.சுப்பிரமணி பிள்ளை, சி.ஜெயக்குமார்பிள்ளை, வி.சுதர்சன் பிள்ளை, பி.சி. ஹரிகுமார் பிள்ளை,
செயற்குழு உறுப்பினர்களான டி.பி.சேகர் பிள்ளை, டி.ஹரிஹரன் பிள்ளை, ஏ.வசந்த கிருஷ்ணன் பிள்ளை, வி.உதயகுமார் பிள்ளை, எஸ். டில்லிபாபு பிள்ளை, எஸ்.ஜெயப்பிரகாஷ் பிள்ளை, ஆர். தேவராஜன் பிள்ளை, என்.பாலாஜி பிள்ளை, டி.தியாகராஜன் பிள்ளை, ஆர். மணிகண்டன் பிள்ளை, எஸ்.ஜெயசங்கர் பிள்ளை
உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் இப்பேரவையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ரமேஷ் பிள்ளை நன்றியுரை கூறினார்.








