தமிழக மக்கள் வாழுமிடமெல்லாம் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் தொப்பி வாப்பா பிரியாணியின் கிளை நிறுவனமான கோழி.இன் (kozhi.in) புதிய கிளை திறப்பு விழா திருவான்மியூர் அருகில் நடைப்பெற்றது.
மேலும் இன்றைய இளைஞர்களின் விருப்ப உணவுகளான பர்கர், சான்விச், டார்டில்லா, மொஜிட்டோ, பிரைடு சிக்கன் போன்ற அட்டகாசமான உணவுப் பட்டியலை கொண்டது. இந்நிறுவனம் தன்னுடைய இரண்டாவது கிளையை பல அதிரடி சலுகைகளுடன் சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் மருத்துவமனை அருகே திறக்கப்பட்டது.
இந்த புதிய கிளையை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் இந்த திறப்பு விழாவில் திமுக வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் துரைகபிலன் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, மாமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி கல்விக் குழு தலைவருமான பாலவாக்கம் விஸ்வநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்களான விசாலாட்சி கபிலன், கயல்விழி ஜெயகுமார், ராதிகா செல்வி,துரை சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கிளையின் உரிமையாளர் லெனின் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய தந்தை மொ.கோ.மணி அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உபசரித்தார்.
181 வது வட்ட கழக செயலாளர் ஜெயகுமார் அவர்களின் நன்றியுரையோடு புதிய கிளை திறப்பு விழா இனிதே நிறைவுற்றது.
மேலும் திறப்பு விழா சலுகை 18 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை இரண்டு வாரங்கள் வழங்கப்படும் என உரிமையாளர் தெரிவித்தார்.


