சென்னை:

தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தினர் பணி பாதுகாப்பு, மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணா நிலை போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத் துணைத் தலைவர் ஏ ஆர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் காளிதாசன், பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நல சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ். தனவந்தன், எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார், தமிழ்நாடு டெங்கு கொசு புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவேல், பொதுச்செயலாளர் சதீஷ், பொருளாளர் பூமிநாதன், மாநில துணைத்தலைவர்கள் விஜயகுமார், விஜயகாந்த், கோகுலகிருஷ்ணன், கார்த்தி, மணிகண்டன், மாநில துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சரவணன், சின்னமணி, சரவணன், சங்கீதா, மாநில ஒருங்கிணைப்பாளர் சுதா , மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், மெய்யழகன், வெங்கடேசன், முருகன், பாண்டியராஜன், பிரபு கவிதா சுரேஷ்குமார் வில் சூர்யா நல்லா நுனித்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தினக்கூலி முறையை கைவிட மாறி ஊதியம் வழங்கிடு குறைஞ்சபட்சம் ஊதிய மாதம் ரூபாய் 20000 வழங்கியது ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஆகியவற்றில் பணிபுரிய பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கினேன் பணி நீக்கம் செய்யாதே பனி பாதுகாப்பு வழங்கினேன் பணி நிரந்தரம் வழங்குது உரைத்துறையின் கீழ் ஊதியம் வழங்கியது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.