சென்னையில் கொரோனா பரவல் பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் உண்ண உணவின்றியும். வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு அசோக் அறக்கட்டளை சார்பில் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி, மெரினா, மயிலாப்பூர், மவுண்ட் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் 300 உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கிவருவதாக, அறக்கட்டளையின் நிறுவனர் விமல்ராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது குழுவுடன் ஒருங்கிணைத்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட உதவிகளை செய்து வருவதுடன் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்துகள் தேவைப்பட்டால் கொண்டு போய் கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்…
சென்னையில் கொரோனா பரவல் பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் உண்ண உணவின்றியும். வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு அசோக் அறக்கட்டளை சார்பில் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி, மெரினா, மயிலாப்பூர், மவுண்ட் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் 300 உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கிவருவதாக, அறக்கட்டளையின் நிறுவனர் விமல்ராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது குழுவுடன் ஒருங்கிணைத்து ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட உதவிகளை செய்து வருவதுடன் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு மருந்துகள் தேவைப்பட்டால் கொண்டு போய் கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்…