கொளத்தூர் : சென்னை கொளத்தூரில் இயங்கிவரும் மெரிடியன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மக்களின் உயிர்காக்கும் பொருட்டாக கோவிட் கேர் சென்டரை ஆரம்பித்துள்ள்ளது.
இந்த தொடக்க விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு. நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் .
மேலும் இந்நிகழ்வில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
(எஸ்.ஏ.ராஜ்குமார்
செய்தியாளர்)_ யுகம் நியூஸ்
