திருபத்தூர்:
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களாக பணியாற்றும் பிரகாசம் மற்றும் பாஸ்கர் மூலமாக மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக விஜயகுமார் என்பவரும் கண்காணிப்பாளராக ராஜேந்திரன் ஆகியோர் பணியில் உள்ளனர். இவர்கள் மோட்டார் வாகன பதிவு சான்றிதழ் தகுதி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் சான்றிதழ் ஆகியவற்றிற்கும் 2000 முதல் 3000 வரை லஞ்சம் பெறுவதாகவும் கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்று அளிக்க இரு மடங்காக 3000 ரூபாயும் ஆட்டோக்களுக்கு 1000 ரூபாயும் டாட்டா ஏசி வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும் பேருந்துகளுக்கு 5000 ரூபாயும் லஞ்சமாக இடைத்தரகர்களாக உள்ள பிரகாசம் மற்றும் பாஸ்கர் என்பவர்கள் மூலமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மேலும் வாகன தணிக்கையின் போது சட்டவிரோதமான மணல் கடத்தல், கனிம வளங்கள் கடத்தல் வாகனங்கள் பிடிக்கப்பட்டால்
ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விட்டு விடுவதாகவும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் கல்குவாரி வாகனங்களை பிடிக்காமல் இருக்க மாதம்தோறும் இவர்களுக்கு
கல்குவாரியின் உரிமையாளர்கள் ரூபாய் 5 லட்சத்தை மாத மாதம் கொடுத்து விடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விஜிலென்ஸ் துறையினர் அலுவலக நாட்களில் பாஸ்கர் மற்றும் பிரகாசம் என்பவரிடமிருந்து ரூபாய் 75,000 லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதன் பின்னர் அந்த 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்ததற்கான எந்தவிதமான நடவடிக்கையும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மீதும் கண்காணிப்பாளர் ராஜேந்திரன்
மீதும் ஏன் எடுக்கப்படவில்லை என்பது அனைவரது கேள்வியாக உள்ளது. ஒருவேளை லஞ்ச ஒழிப்புக்கே லஞ்சம் கொடுத்துள்ளனரா ?

மேலும் அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை மட்டும் செலுத்தினால் பொதுமக்கள் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டு பொதுமக்களை அலைக்கழிக்கப்படுகின்றனராம்.
வாகன பதிவுக்கு பழைய வாகனம் தகுதிச் சான்றுக்கும் அலைந்து திரிந்து கடைசியில் வெறுத்துப் போய் பாஸ்கரன் மற்றும் பிரகாசத்தை சந்தித்து அவர்கள் கேட்கும் லஞ்சப் பணத்தை கொடுத்தால் மட்டுமே காணாமல் போன இவர்களுடைய ஆவணங்கள் கிடைக்கப்பெறுகிறதாம். இதனால் இவ்வலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி அவர்களுடைய பணத்தையும் இழந்து அலுவலக வேலையும் சரி வர செய்ய முடியாமல் அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறதாம்.

மேலும் விஜயகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் தற்போது பதவி உயர்வுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது லஞ்சத்தில் ஊறிய இவர்களைப் போன்றவர்கள் பதவி உயர்வு பெற்றால் இவர்கள் செல்லும் அலுவலகத்தின் நிலை என்னவாகும் என்பதை உயரதிகாரிகள் சிந்தித்து இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவர்கள் லஞ்சப் பணத்தில் சேலத்தில் சொகுசு பங்களா ஏக்கர் கணக்கில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளதாக நம்பத் தகுந்த அலுவலக வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு நேர்மையான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவர்களுடைய வீட்டிலும் இவர்களுடைய உறவினர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டால் முறைகேடாக சேர்த்த சொத்துக்களின் விவரங்கள் தெரியவரும் என அலுவலக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறையின் பார்வை மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மீதும் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மீதும் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.