அரியலூர்:மலரும் நினைவுகள் இரத்ததான அறக்கட்டளை மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் இதன் நிறுவனர் முனைவர் எஸ்.முருகன் அவர்கள் தலைமையில்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்புற நடைப்பெற்றது.
இம் முகாமில் காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்துக்கொண்டு இரத்ததானம் மற்றும் பொது விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.

சமூக ஆர்வலர்கள் விக்கிரமங்கலம் வாசுகி, காசன்கோட்டை முருகமணி ஆகியோர் நிகழ்வு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் இதில் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் பாக்யராஜ், மக்கள் பக்கம் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் நிறுவனத்தலைவர் கணேசன் வடிவேல், இந்திய குடியரசு கட்சி அரியலூர் மாவட்ட தலைவர் வீ,ராஜீவ்காந்தி, சமூக ஆர்வலர்கள் நாதன், அரியலூர் ரா.சத்யமூர்த்தி, கார்த்திக், ஆண்டிமடம் வேம்பரசன், கீழப்பழுவூர் சைக்கிள்
எஸ். பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர்.

மருத்துவ குழுவினருக்கு பாஸ்கர் சுமதி உணவகம் மூலம்
காலை உணவும்,
கவின் வாட்டர் ரவி அவர்கள் மூலம் மதிய உணவும், சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தி அவர்கள் மூலம் தேனீர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் முருகேசன் அவர்கள் மூலம் சிறப்பு உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும் விக்கிரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி நாட்டு நலத்திட்டப்பணி மாணவர்கள்
மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மலரும் நினைவு இரத்ததான அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் எஸ். முருகன் அவர்கள்
பங்கேற்பு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இந்த சிறப்பு முகாமில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

மேலும் 30 நபர்களுக்கு மேல்சிகிச்சைக்கான அட்டைகள் வழங்கப்பட்டது.
