சென்னை:அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டுக் கழகத்தின் கலைக் குழு வியட்நாம் செல்கிறது.
வியட்நாம் – இந்திய நட்புறவு கலாச்சார கலைவிழாவில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து ஐப்சோவின் சார்பில் விடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
கடந்த 2023 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வியட்நாம் – இந்திய நட்புறவு கலாச்சார குழுவின் சார்பில் கலைக்குழு சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வருகை தந்தது .
இந்திய – வியட்நாம் கலாச்சார நட்புறவு விழா ,சென்னை ,மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது. அவற்றில் வியட்நாம் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சென்னையில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு என்.ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு (2024) டிசம்பர் 16 முதல் 21 வரை ஐப்சோ கலை குழு வியட்நாம் செல்கிறது .
இந்தக் கலைக் குழுவிற்கு அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஹர்ச்சந்த் சிங் தலைமை தாங்குகிறார்.
இக்குழுவில் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் , அகில இந்தியச் செயலாளர் ஐ. ஆறுமுக நயினார்,
புதுச்சேரி மாநில ஐப்சோ தலைவர் நாரா. கலைநாதன், மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களான,
சி.பி.எம் மத்தியக் குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராஜன் ,
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்தியா,
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் ,
வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்
சென்னை மாநகர மாமன்ற உறுப்பினர் ஜெ.எஸ்.டில்லி பாபு ஆகியோர் இக்குழுவில் செல்கின்றனர்.
இவர்களுடன் ,
ஐப்சோ தேசியக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர். சாந்தி,கே.சி.
கோபிக்குமார் , புதுச்சேரி
மாநில ஐப்சோ நிர்வாகிகள் ராமச்சந்திரன்,
கீதானந்தன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
பல வகையான பராம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திட,
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கலைஞர்கள் இக்குழுவில் செல்கின்றனர்.
மொத்தம் 37 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
வியட்நாமின் ஹனாய், கோ சி மின் நகரம் உள்ளிட்ட பல இடங்களில் இவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந் நிகழ்ச்சிகளில் உலக சமாதானக் கவுன்சிலின் தலைவர் பல்லப்சென் குப்தா கலந்து கொள்கிறார்.
வியட்நாமின் துணை குடியரசுத் தலைவர் வோ தி அன் சுவான், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், இளைஞர் – மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை இக்குழுவினர் சந்தித்து உரையாடுகின்றனர்.
வியட்நாம் – இந்திய நட்புறவுக் கழகம்,நட்புறவிற்கான வியட்நாம் அமைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளை வியட்நாமில் ஏற்பாடு செய்கின்றன.
இக்குழுவினர் வருகின்ற 15.12.2024 மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுகின்றனர்.
இவண்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
9940664343
ஐ.ஆறுமுக நயினார்
9790515181
டாக்டர் நா.எழிலன்
9841577595
பொன்.கிருஷ்ணமூர்த்தி
9444061830
பொதுச் செயலாளர்கள்,
ஐப்சோ,தமிழ்நாடு மாநிலக் குழு.
All India Peace and Solidarity Organisation (AIPSO) ,
Tamilnadu State Council.
