சென்னை :
சென்னை மாநகராட்சி 114- வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கே.இ.எம்.தமீம் அன்சாரி அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக மாவட்ட மத்திய வட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் தைபூன் அலிகான் தெரு, மேயர் சிட்டிபாபு தெருக்களில் பிரச்சாரம் செய்தவாறு வாக்குகள் சேகரித்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெண்கள்ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம்
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தேர்தலில் என்னை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் இந்த வார்டு மக்களுக்கே முழுநேரமும் உழைப்பேன். அடிப்படை வசதிகளை செய்து தருவேன். எந்த நேரமும் மக்கள் என்னை அணுகலாம்.
இப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு அரசு பென்சன் பெற்று தருவேன்.தெருக்கள் தோறும் பொது குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவேன்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். பொதுகழிப்பிடங்கள் கட்டி தருவேன்,போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்.

சென்னை மாநகராட்சியில் 114வது வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றி காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்து வாக்குகள் சேகரித்தார்.
பொதுமக்கள் இரட்டை இலைக்கு வாக்கு அளிப்பதாகவும் உறுதி அளித்தனர்.

இந்த பிராச்சாரத்தின் போது அ.திமு.க கழக நிர்வாகிகளான எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா, சி.எஸ். ஆனந்தன், ஜி.சந்திரபாபு,ராமதாஸ், ஜெயச்சந்திரன் ,ஆம்னி அண்ணாதுரை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.