திருவண்ணாமலை:
அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும்
கருங்காலி குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் வட்டம், கருங்காலி குப்பம் பிள்ளையார் கோயில் அருகில் இரண்டு நாட்கள் இந்த அறக்கட்டளையின் பொருளாளர் கலைச்செல்வி அவர்கள் தலைமையிலும், இயக்குநர் கீதா அவர்கள் முன்னிலையிலும் சிறப்புற நடைப்பெற்றது.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நியூஸ் அறக்கட்டளையின் இயக்குநர் மு.அ.காளிதாஸ், தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி , ஆசிரிய பெருமக்களான அரங்கநாதன்
தஞ்சையப்பன்,
அஞ்சல்துறை தலைவர் ராமகிருஷ்ணன், தணிக்கையாளர் பாபு,
டாஸ் அக்ரோ சர்வீஸ் நிறுவன இயக்குநர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


இந்த பாரம்பரிய நிகழ்வினை முருகன் அவர்கள் திறம்பட தொகுத்து வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் உள்ளிட்டோருக்கு வெகுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கருங்காலிகுப்பம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வம், மற்றும் முருகன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இறுதியில் செயலாளர் மஞ்சுளா அவர்கள் நன்றியுரை நல்கினார்.
இந்நிகழ்வில் கருங்காலிகுப்பம் கிராமத் தலைவர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டனர்.

