பெங்களூர்:அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறையில் சாதனை புரிந்த ஆசிரிய மேன்மக்களுக்கு குரு சம்மன் என்கிற விருது வழங்கும் நிகழ்வு பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் மு. சந்தோஷ்குமார் அவர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த குரு சம்மன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.