சென்னை:
சமூக நீதியை நிலைநாட்டு
வதில் தமிழக மக்கள் உயிர் நாடியாக கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்கள், இதற்கு எதிரான சம்பவங்கள், சாதிய ஆணவ கொலை என்கிற போர்வையில் நடைபெற்று வருவதை கண்டு மக்கள் பெரும் அச்சத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர், தமிழ்செல்வி தம்பதியினரின் மகன் சென்னை ஐ. டி. யில் இஞ்சினியராக பணியாற்றி வரும் கவின் என்ற 27 வயது இளைஞர் ஆணவ படுகொலை செய்யபட்டிருப்பதை கல் நெஞ்சம் உள்ளவர்களையும் அதிர்சியடையவைத்துள்ளது.
மாற்று சமுகத்தை சேர்ந்த ஒரே காரணத்திற்காக தனது மகள் விருப்புவதை ஏற்க மறுத்து தனது 24 வயது மகனான சுர்ஜித்தின் மூலம் கடந்த 27.07-25 அன்று இளைஞர் கவினை ஆணவ படுகொலை செய்ய வைத்த காவல்துறை உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் நெல்லை பாளையங்கோட்டை டி. எம். சி நகரை சேர்ந்த சரவணன், கிருஷ்னகுமாரி ஆகியோரின் காட்டுமிரான்டி செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இனம், மொழி, மற்றும் சாதிகளை கடந்து சமூக நீதியை பின்பற்றும் தமிழ்நாடு மண்ணில் தொடர்ந்து நடைபெறும் இந்த சாதிய ஆணவ படுகொலை என்பது மக்களாட்சிக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிராக நடைபெறும் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகன்களின் தலையாய கடமையாகும்.
எனவே இந்த ஜனநாயகத்துக்கு எதிரான சாதிய ஆணவ படுகொலையை எதிர்த்து போராட அனைத்து சமூக தலைவர்களும் ஓரனியில் ஒன்றினைந்து போராட வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
