சென்னை:
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்டக் குழு சார்பில்
சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க  தென் அமெரிக்க நாடான
வெனிசுலாவின் மீது
அமெரிக்கா  ராணுவத் தாக்குதலை நடத்தி,அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி  சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து ,தனது நாட்டிற்கு நாடு கடத்தி உள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வெனிசுலாவின் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும், இறையாண்மைக்கும், சுயநிர்னய உரிமைக்கும் ,சர்வதேச சட்டங்களுக்கும்  எதிரான அமெரிக்காவின்  இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை  கண்டித்தும்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் ,
அமெரிக்கா நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்திட வலியுறுத்தியும்,
அமெரிக்கப் படைகள் வெனிசுலாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ,
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும்,இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க அமெரிக்கா முயல்வதை கைவிடக் கோரியும்,
ஒன்றிய மோடி அரசு அமெரிக்காவை கண்டிப்பதோடு , வெனிசுலாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிட வேண்டும் என வலியுறுத்தியும்,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐப்சோவின்
சென்னை மாவட்ட  அமைப்பாளர் பி.செந்தில்குமார் தலைமை தாங்குகினார்.
சென்னை மாவட்ட அமைப்பாளர் ஏ.இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.

ஐப்சோவின் மாநில பொதுச் செயலாளர்கள்
டாக்டர் ஜி .ஆர். இரவீந்திரநாத்,
ஐ.ஆறுமுக நயினார், தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்தியக் கம்யூனிஸ் கட்சியின்  முன்னாள் மாநிலச் செயலாளர் 
இரா.முத்தரசன்  ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்.

இவண்,
பா.செந்தில்குமார்
ஏ.இராஜேந்திரன்
ஐப்சோ சென்னை மாவட்ட அமைப்பாளர்கள்,
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (ஐப்சோ).