ஆத்தூர்:சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கபட்ட நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கியும், அதை அவர்களுக்கு அளந்து அவர்கள் பயனடைய கிராம நிர்வாக அதிகாரி சான்று பெற்றும்,மனு கொடுத்தும், நிலத்தை பயனாளிகளுக்கு அளந்து கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதை கண்டித்தும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்ச்சியரை கண்டித்தும் சேலம் மாவட்டம்,ஆத்தூர் பேருந்து நிலையம், மணிக்கூண்டு அருகில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் எஸ். பழனியம்மாள் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின்
கள்ளக்குறிச்சி, நாமக்கல்,சேலம் மண்டல செயலாளர் எம்.பாலமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் சேலம் மாவட்டதலைவர்
க.குமரேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எம். எல். ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
மேலும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சிறப்பு சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் முனைவர் பி.
சிவஞான சம்பந்தம்,
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஆர். தனசேகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சி.மூர்த்தி மண்டல தலைவர் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் தேசிய மக்கள் சக்தி கட்சி,
ராஜேஸ்வரி
சேலம் மாவட்ட செயலாளர் தேசிய மக்கள் சக்தி கட்சி,
ஜி.ராஜமாணிக்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் தேசிய மக்கள் சக்தி கட்சி,
சி.யோகேஸ்வரன்
சேலம் மாவட்ட தலைவர் தேசிய மக்கள் சக்தி கட்சி,
எம்.அஞ்சலி மண்டல தலைவர் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சி,
வி.பத்மஸ்ரீ
சேலம் மாவட்ட மகளிரணி தலைவர் தேசிய மக்கள் சக்தி கட்சி,எஸ்.செந்தில்
முருகன் நாமக்கல் மாவட்ட செயலாளர் தேசிய மக்கள் சக்தி கட்சி அ.மயிலாம்பாறை மாரி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தேசிய மக்கள் சக்தி கட்சி,சத்யபிரியா அசோக் சேலம் மாவட்ட தலைவர் தேசிய மக்கள் சக்தி கட்சி,கே.பிரேமா
சேலம் மாவட்ட மகளிரணி செயலாளர் தேசிய மக்கள் சக்தி கட்சி,ஆர்.முருகன் நாமக்கல் விவசாய அணி சேந்தமங்களம் ஒன்றியம்,சி.ஜெயராமன்
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் தேசிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
மேலும் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் அட்டவணைப்படி கொத்தம்பாடி கிராம சர்வே எண். 69 /5.76/3.A என்கிற இந்த சர்வே நம்பரில் உள்ள மனை நிலங்கள் ஆதி திராவிடர் நலத்துறையால் தனி தாசில்தாரர் ந.க.எண்:1401அ /93 இதன் மூலமாக ஆதிதிராவிட மற்றும் அருந்ததியர்களுக்கும் தனி தாசில்தார் எல்லப்பன் அவர்கள் மூலம் 12/1996 ஆம் ஆண்டு 65 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை வழங்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை 30 வருடங்களுக்குமேலாகியும் இந்த நிலம் அளவீடு படி சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யாமலும், 2017 ஆம் ஆண்டு புத்தூர் கிராமம் மற்றும் தேவனூர் கிராமம் மக்களுக்கு அந்தந்த கிராமத்தில் உள்ள கிராம ஆய்வாளர் பரிந்துரையின் பெயரில் வீடற்றோர் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்தும் 7 வருடங்கள் ஆகியும் இன்றுவரை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு எந்த ஒரு இடமும் ஒதுக்கப்படவில்லை.
ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நிலம் அளவீடு செய்தும், வீடற்ற எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், அரசு அதிகாரிகளை கண்டித்தும் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
