தஞ்சாவூர்: செப்டம்பர்,30,
2025:தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி பி.வி செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் கடந்த செப்டம்பர் 27,28 பகல், இரவு மின்னொளி அரங்கில் தஞ்சாவூர் யுனைடெட் கால்பந்து கழகத்தின் சார்பில் நடைபெற்றது
கால்பந்து போட்டிகளில் 10, 12, 14 வயது பிரிவினர் நிலைகளில் போட்டிகளும், பொது பிரிவில் பெண்கள் கால்பந்து அணியினரும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
இந்த போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை ,புதுக்கோட்டை உள்பட மாவட்டத்தில் இருந்தும் 42 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டிகளில் கோயம்புத்தூர் ட்ரீம் சேஸஸ் கால்பந்து கிளப் அணியினர் 10 ,12 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் முதல் பரிசாக கோப்பையையும் மெடலையும் இரு பிரிவினர் பெற்றனர்.
இந்த அணியின் பயிற்றுநர்கள் மணிகண்டன், தர்ஷன், அபிலாஷ் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டு தலுடன் கால்பந்து விளையாட்டு வீரர்களின் விறுவிறுப்பான மற்றும் சாதுரியமாக , அபாரமாக
விளையாடியாதை பார்வையாளர்கள் உற்சாகமாக பாராட்டினார்கள்.
மேலும் தஞ்சாவூரில் கால்பந்து விளையாட்டு என்பது சிறந்த கால்பந்து வீரர்கள் உள்ள நகரமாக உள்ள சூழ்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த டீரீம் சேச்சர்ஸ் அணியினர் தங்களது சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று முத்திரை பதித்தனர்.
10 வயதிற்கு மேற்பட்டோருக்கான இரண்டாம் பரிசை கோயம்புத்தூர் ஃபர்ஸ்ட் கிக் ஸ்கூல் ஆஃப் சேக்கர்ஸ் அணி யினரும், மூன்றாவது பரிசாக சென்னை கிரை ஸ்டோல் அணி யினரும் , நான்காவது பரிசாக சென்னை ஏ டி பி அணிகளும் பெற்றனர்.
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது பரிசாக சென்னை கிரை ஸ்டோல் அணியினரும், மூன்றாவது பரிசாக ஒய். பி.ஆர் ஒரத்தநாடு அணியினரும், நான்காவது பரிசாக தஞ்சாவூர் யுனைடெட் அணியினரும் பெற்றனர்
14 வயது மேற்பட்டவர்களில் முதல் பரிசாக ஒரத்தநாடு மெர்டேனா நினைவு அணியினரும் , இரண்டாவது பரிசாக தஞ்சாவூர் யுனைடெட்
அணியினரும், மூன்றாவது பரிசாக ஒய்.பி.ஆர் ஒரத்தநாடு அணியினரும், நான்காவது பரிசாக தஞ்சாவூர் கலக்கோ அணியினரும் பெற்றனர்.
இந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பூண்டி புஷ்பம் கல்லூரி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார், பி வி செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளரும், முதல்வருமான மகேந்திரன் கண்மணி ,பூண்டி புஷ்பம் கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் மதன்மோகன் மற்றும் கால்பந்தாட்ட முன்னாள் வீரர்கள் பரிசளித்து பாராட்டினர் பயிற்றுனர்கள் அருள் சந்தோஷ், கவியரசன் மற்றும் தஞ்சாவூர் யுனெடெட் அணியினரும் குமரேசன் நினைவு கால்பந்து கிளப் அணியினர், சிறப்பான ஏற்பாடுகளையும் உடற்கல்வி ஆசிரியர்கள் கால்பந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .
