சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு ) சார்பில் உண்ணாநிலை போராட்டம் சென்னை, எழும்பூர்
இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கீழ்கண்ட கோரிக்கைகள் :
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG)தற்காலிக தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் செய்யும் TNMC யின் செயல்பாடுகளை கண்டிக்கிறோம். அந்த மெத்தனப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் .
மாவட்ட மருத்துவமனைகளிலும் FMG கள் CRMI பயிற்சி பெற அனுமதித்திட வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த CRMI இடங்களில் FMG களுக்கு 7.5% வழங்குவதை 20% ஆக ஒன்றிய அரசு உயர்த்திட வேண்டும்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ. ஆர் .சாந்தி துவக்கி வைத்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ,காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் டாக்டர் மு. சரண், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எஸ். வசந்த் பிலிப்ஸ் அபிஷேக், உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

இவண்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் .
9940664343
9444181955
டாக்டர் எஸ்.வசந்த் பிலிப்ஸ் அபிஷேக்,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாட்டுப் பிரிவு.
தொடர்புக்கு:
9994646743
