நாமக்கல்:
பல்வேறு சமூகப் பணிகளையும், பொதுமக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை தொடர்ந்து கையாண்டு பல்வேறு வெற்றிகளை பெற்று சமூக சிந்தனையோடு செயல்பட்டு வரக்கூடிய ஆற்றல் மிகு போராளியும், சமூக செயல்பாட்டாளருமான தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் முனைவர். த.குமரவேல் மற்றும் அவரது துணைவியாருக்கும் கடந்த 25.12.2025 வியாழக்கிழமை விடியற்காலை மோகனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

அதன் அடிப்படையில் 27.12.2025 மாலை 7:00 மணி அளவில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் நேரில் சென்று நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர் குமரவேல் அவர்களுக்கும் மற்றும் அவரது துணைவியார் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து நலம் விசாரித்தார்.

இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் இளவேனில், மாநில அமைப்பு செயலாளர் ஹிட்டாச்சி சிவா, மாநில அரசு ஊழியர்கள் அணி செயலாளர் பலராமன், மாநில பொறுப்பாளர் சிற்றரசு, மண்டலச் செயலாளர் (சேலம், நாமக்கல்) உதய பிரகாஷ், மோகனூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வழக்கறிஞர்கள் அருண், ஜெயப்பிரகாஷ் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆண் குழந்தை பிறந்ததற்கு பல்வேறு கட்சியினர், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.