நாமக்கல்!
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட தத்தாதிரிபுரம் பஞ்சாயத்து, சேவகவுண்டம்பாளையம் பட்டியலின அருந்ததியர் மக்களாகிய நாங்கள் சுமார் நான்கு தலைமுறைகளாக அனுபவித்தும் பயன்படுத்தியும் வந்த பொதுப் பாதை மற்றும் சுடுகாடு, இடுகாட்டினை கடந்த 15.12.2025 நேற்றைய முன்தினம் அப்பகுதியின் உடைய உயர்சாதிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சில நபர்கள் பட்டியலின அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த எங்களுடைய மூதாதையர்கள் மற்றும் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுடைய உடல்களை காட்டை ஒட்டி செல்லக்கூடிய பொது பாதையை பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சாதிய சிந்தனையில் , சாதிய மனநிலையில், இரவோடு இரவாக புதுப்பாதையை ஜேசிபி இயந்திரம் கொண்டு நடுவிலே பறித்து சேதப்படுத்தியது மட்டுமில்லாமல் எங்களுடைய சுடுகாடு மற்றும் இடுகாடு ஆகியவற்றையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஒரு பகுதியை பறித்து சேதப்படுத்தி பட்டியலின மக்கள் யாரும் பொது பாதையை பயன்படுத்தாத வகையிலும், சுடுகாடு இடுகாட்டினை பட்டியல் இன மக்கள் பயன்படுத்தாத வகையில் அப்பகுதியின் உடைய சாதிய மனநிலையோடு உள்நோக்கம் கொண்டு தடுத்து நிறுத்தி சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

எனவே பட்டியலின மக்களாகிய அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையையும், சுடுகாடு மற்றும் இடுகாட்டினை இரவோடு இரவாக சாதிய வன்மத்தோடும், சாதிய சிந்தனையோடும் சாதிய மனநிலையோடு தடுத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், சுடுகாடு மற்றும் இடுகாட்டிற்கு எரிமேடை மற்றும் அதனைச் சுற்றி சுற்று சுவர் அமைத்து கொடுக்க வேண்டி தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் முனைவர். குமரவேல் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவேரா, புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாமலை, புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரமணி, நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் வரதராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனிருந்தனர்.