நாமக்கல்:
எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் தேதி கரூர் நகரில் வெல்லும் தமிழ்நாடு என்கிற எழுச்சி மாநாடு சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாநகரில் வேலவன் காம்ப்ளக்ஸில் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர். த. குமரவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மாநாடு களப்பணிகள், சுவர் விளம்பரங்கள், மாநாடு துண்டு பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்பு வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மற்றும் தற்போது நடைபெற்று வரக்கூடிய மாநாடு சம்பந்தமான களப்பணிகளை கூர்மைப்படுத்துவது போன்ற பல்வேறு நாமக்கல் மாநகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர். சிவகுமார், மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தோழர். செல்வராஜ், மாநகரச் செயலாளர் தோழர். தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில வணிகர் அணி செயலாளர் தோழர். சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.
இறுதியாக மாநகர துணைச் செயலாளர் தோழர்.குமார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
