நாமக்கல்:கடந்த 2018 ஆண்டு அக்டோபர் மாதம் 14- ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி கிராமம் கதவு எண்: 155/6- ல் வசித்து வரும் செங்கோடன் அவர்கள் மகன் எஸ்.சண்முகம் மற்றும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், மோகனூர் பேரூராட்சி, இராசிகுமரிபாளையம் தெரு, பெரியார் நகர், கதவு எண்: 93- ல் வசித்து வரும் வில்லன் மகன் சிவா, மற்றும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சின்னமணலி கிராமம், பாளையம், அருந்ததியர் தெரு, கதவு எண்: 3/80-ல் வசித்து வரும் ஆறுமுகம் அவர்கள் மகன் சிவக்குமார், நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை வழி, கல்லாங்குத்து, எம்ஜிஆர் நகர், கதவு எண்: 54/1- ல் வசித்து வரும் வீரமுத்து அவர்களின் மகன் வினோத் மற்றும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், ஆலாம்பாளையம், வெங்கடேசபுரம், அருந்ததியர் தெரு, கதவு எண்: 3-2/66 E- ல் வசித்து வரும் கணேசன் அவர்கள் மகன் அழகேசன், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், நாமக்கல் டவுன், தபால் நாராயணசாமி தெரு, கதவு எண்: 63 A- ல் வசித்து வரும் ராஜீ அவர்கள் மகன் ரா.உமாமகேஸ்வரன் ஆகிய நாங்கள் அனைவரும் உற்றார் உறவினர்கள் மூலமாகவும், சமூகப் பிரதிநிதிகள் மூலமாகவும், தனிப்பட்ட முறையிலும் சிறுக சிறுக தொகையை சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூபாய். ஒரு கோடியே 47 லட்சம் ரூபாயை வைத்து ஏதேனும் ஒரு தொழில் செய்து அதில் வரும் வருவாயைக் கொண்டு நமது பட்டியல் இன மக்களுக்கு சேவை செய்யவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்கும் வகையிலும், இதர நமது தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் சிறுக, சிறுக சேமித்த தொகையை வைத்திருந்த சமயத்தில் எங்களில் ஒருவரான சண்முகம் என்பவர்  நாமக்கல் வட்டம், பெரியப்பட்டியில் பார்க் பப்ளிக் பள்ளியை கட்டி வருகிறார்கள். அந்தப் பள்ளியின் அறங்காவலர்களில் ஒருவரும், சேர்மேனுமான திரு. செங்கோடன் என்பவர் எனக்கு 30 ஆண்டுகாலம் நெருங்கிய நண்பர் அதுமட்டும் இல்லாமல் நம்பிக்கைக்கு உரியவர் என்றும், மிகவும் நேர்மையாக செயல்படக்கூடிய நபர் என்றும் அவர் பார்க் பப்ளிக் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு தொகை தேவைப்படுகிறது என்று கூறியதன் அடிப்படையில் நாம் வைத்திருந்த தொகையினை கொடுத்தால் நமக்கு மாத மாதம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டியை கொடுப்பார்கள். இதனால் நாம் சமூதாய வளர்ச்சியும், நம் சமூகத்தினுடைய அடிப்படை தேவையையும் பூர்த்தி செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியதன் பேரில் நாங்கள் அனைவரும் இந்த செய்தி என்பது உண்மையா என்று விசாரித்து பார்த்ததிலும் பள்ளியின் தீர்மானத்தில் போட்டுள்ளபடி திரு.செங்கோடன் அவர்கள் பார்க் பப்ளிக் பள்ளியினுடைய அறங்காவலர்களில் ஒருவர் என்பதும், அப்பள்ளியின் சேர்மேனாகவும் உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு கடன் வாங்க மற்றும் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் போட்டு முழுஅதிகாரமும் கொடுத்துள்ளதையும் அதற்கு அந்த பள்ளியின் மற்றொரு அறங்காவலரான திரு. ராமச்சந்திரன் என்பவர் எங்களிடம் வாங்கிய கடன் தொகைக்கு எப்படி எல்லாம் வட்டியும், அசலும் கட்டலாம் எனவும் அவர்களுக்குள் போட்ட தீர்மானத்தை நம்பியும் இவர்கள் பெயரில் உள்ள நம்பிக்கையின் பொருட்டும், கல்வி உரிமை அனைத்து  குழந்தைகளுக்கும் சென்று சேரும் வகையில் இது அமைந்துள்ளது இதனால் அனைத்து சமூக குழந்தைகளும் படிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நாங்கள் அனைவரும் முழு மனதில் சம்மதித்து அவர்களுக்கு பெரியபட்டியில் தற்போது இயங்கி வரும் பார்க் பப்ளிக் பள்ளி கட்டிடத்திற்கு கடன் கொடுத்தோம். 

இப்படி கொடுத்த பணத்திற்கு (தொகை) சிறிது மாதங்களுக்குப் பிறகு அசலும், வட்டியும் கொடுப்பதாக கூறியதன் அடிப்படையில் இத்தொகைக்கு சட்ட முறைப்படி ஒரு ஆவணத்தை பார்க் பப்ளிக் பள்ளியின் அறக்காவலர்களில் ஒருவரான அப்பள்ளியின் பங்குதாரரும் சேர்மேனுமான திரு.செங்கோடன் மூலமாக எழுதி வாங்கிக் கொள்ள  வேண்டுமென்று கூறியதன் அடிப்படையில் மேற்கண்ட அனைத்து நபர்களிடமிருந்தும் பெற்ற தொகையினை பார்க் பப்ளிக் பள்ளியின் அறங்காவலர்களில் ஒருவரான சேர்மேன் திரு செங்கோடன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.  அத்தொகையினை கொடுக்கும்பொழுது திரு.ராமச்சந்திரன், பழனியப்பன் ஆகியோரின் முழு ஒத்துழைப்பும், அவர்களது கவனத்திற்கும் கொண்டு சென்று அவர்களின் முழு சம்மதத்துடனும், நம்பிக்கையுடனும் நாங்கள் கொடுத்த தொகையினை பெற்றுக் கொண்டனர்.  அதுமட்டும் இல்லாமல் இவர்கள் கடன் பெற டிரஸ்ட் அறங்காவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மான நோட்டில் அறங்காவலர்களான சாந்தி, பாபு ஆகியோர்களும் கையெழுத்திட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  பார்க் பப்ளிக் பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக கொடுத்த அசல் தொகையையும், அதற்குண்டான வட்டியும் அதாவது அசலும், வட்டியும் மாதாமாதம் வருவதை எடுத்து நம் பட்டியல் இன சமுதாயத்துடைய வளர்ச்சி மற்றும் பட்டியலின மக்களுடைய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும், பட்டியல் இன மக்களுடைய கல்வி தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பார்க் பப்ளிக் பள்ளியின் அறங்காவலர்கள் முறையாக சரியாக அசலும், வட்டியும் கட்டினால் மீண்டும் இதே பள்ளி நிர்வாகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் பொருளாதார ரீதியாக பணம் கொடுத்து உதவி செய்யலாம் எங்கின்ற ஒரு மனதாக எங்களுக்குள் தீர்மானித்து உறுதிமொழி ஆவணம் ஒன்றும் எழுதிக் கொண்டோம். 

இப்படியான நிலையில் பணத்தினைப் பெற்றுக் கொண்ட பார்க் பப்ளிக் பள்ளியின் உடைய அறக்காவலர்கள் திரு.செங்கோடன் மற்றும் திரு.ராமச்சந்திரன், பழனியப்பன் ஆகியோர் நாங்கள் கொடுத்த பணத்திற்கு முறையாக அசலும், வட்டியும் கட்டாமல் இப்போது தருகிறேன், நாளை தருகிறேன், இன்னும் ஒரு மாதம் கழித்து தருகிறேன், என்றெல்லாம் சொல்லி தொடர்ந்து தட்டிக் கழித்து வந்ததுடன். இந்த ஆண்டு பள்ளி குழந்தைகள் சேர்க்கை முடிந்தவுடன் தங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையையும் சேர்த்து அனைத்தையும் கொடுத்து விடுகிறோம் என்று தொடர்ந்து சொல்லி ஆண்டு கணக்கில் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். நாங்கள் பார்க் பப்ளிக் பள்ளியின் அறங்காவலர்களில் ஒருவரும், சேர்மேனுமான திரு.செங்கோடன் அவர்களிடம் கேட்டபோது நீங்கள் கொடுத்த பணத்தினை பார்க் பப்ளிக் பள்ளியில் தான் முதலீடு செய்துள்ளோம். எனவே நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் கொடுத்த இந்த தொகைக்கு முழு பொறுப்பும் மற்றும் திருப்பித் தருவதற்கு நானும், திரு.ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பொறுப்பு என்றும் நம்பிக்கையும், உத்தரவாதமும் கொடுத்தனர். அதன் பிறகும் கொடுத்த தொகை சம்பந்தமான எந்த விதமான முன்னேற்றம் ஏற்படாததால் மீண்டும் திரு.செங்கோடன் அவர்களிடம் கேட்டபோது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னால் நீங்கள் கொடுத்த தொகை பார்க் பப்ளிக் பள்ளியின் கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்றும் நிர்வாகத்தில் முதலீடு செய்துள்ளோம் 

எனவே பார்க் பப்ளிக் பள்ளி நிர்வாகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை உங்களுக்கு முழுவதுமாக எழுதிக் கொடுக்கிறேன் என்று கூறி பார்க் பப்ளிக் பள்ளியின் நிர்வாகத்திலும், முதலீட்டிலும் எங்களுக்கான பங்கீடு உண்டு என்பதை பொது அதிகார ஆவணத்தை எழுதி கொடுத்தார். இதனைப் பெற்றுக் கொண்ட நாங்கள் பணத்தை கொடுத்த எங்களுக்கு தீர்வு காண கடந்த 26.08.2025 அன்று பார்க் பப்ளிக் பள்ளி நிர்வாகத்திடம் கேட்க சென்றபோது திரு.ராமச்சந்திரன்,  அவர்கள் பள்ளியில் இல்லை என்று கூறினார், நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவரது மேலாளர் எங்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை மாறாக இன்று அவர் வெளியில் உள்ளார். எனவே நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார். நாங்களும் அவர்கள் சொன்னதைப் போல மறுநாள் 27.08.2025 அன்று மீண்டும் பள்ளிக்கு சென்று கேட்டபோது அவர் இங்கு இல்லை அவர் பெங்களூர் சென்று விட்டதாகவும் எனவே நாளை வாருங்கள் என்று கூறினார்கள். மீண்டும் அவர் சொன்னதை ஏற்று மறுநாள் 28.08.2025 அன்று கேட்டபோதும், இன்று இல்லை நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டனர். மீண்டும் 29.08.2025 அன்று கேட்டபோது அவர் இன்று வரவில்லை எனவே நாளை வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் இன்று, நாளை, என தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருகிறார்கள். 

எனவே பட்டியலின மக்களுடைய பொருளாதாரத்தை சிறுக சிறுக சேமித்து வைத்த தொகையினை நல்லெண்ணம் கருதி திரு.ராமச்சந்திரன், பழனியப்பன் மற்றும் செங்கோடன் ஆகியோர் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் பணத்தினை கொடுத்தோம். ஆனால் இவர்கள் பணத்தைப் பெற்று கொண்ட பிறகு இன்று, நாளை என ஏமாற்றும் உள்நோக்கத்தோடும், இவர்கள் கொடுத்த பொது அதிகார ஆவணத்தின் அடிப்படையில் பள்ளியில் முதலீடு செய்ததினால் பள்ளியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று எழுதி கொடுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளிக்கு சென்றால் இவர்கள் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே விட அனுமதிக்காமலும், எங்களை புறக்கணிக்கும் வேலையையும் அதே சமயத்தில் உள்ளே வரக்கூடாது நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறி தட்டிக் கழிக்க கூடிய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். 

எனவே பட்டியலின மக்களாகிய எங்களிடம் வாங்கிய தொகையினை கொடுக்க மனமின்றி ஏமாற்றும் உள்நோக்கத்தோடு செயல்படும் மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் மீது நாங்கள் கொடுத்த புகார் மனுவை பெற்று முறையான விசாரணை மேற்கொண்டு மேற்படி நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து எங்களிடம் பெற்ற தொகையினை அவர்களிடமிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தனர்.