கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கிளை ஆலோசனை கூட்டம்
தலைவர். வி. வெங்கடேசன் தலைமையில் தியாகதுருகம் அலுவலகத்தில் நடைபெற்றது
மேலும் இக்கூட்டத்தில் இதன் பொதுச்செயலாளர் மனிதநேயர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்களின் முன்னிலையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அவையாவன:
கல்லக்குறிச்சி நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள கட்டண கழிவறை களில் நகராட்சி அலுவலக முத்திரை பொறித்த கட்டண ரசீது வழங்கிட வலியுறுத்தியும், பேருந்து நிலையத்தில் 2002ல் கட்டப்பட்ட தொற்று நோய் பரவும் அபாயமுள்ள, பாழடைந்த கழிவறைகளை இடித்து விட்டு புதிய கழிவறைகள் கட்டிடம் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத கல்லக்குறிச்சி நகராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது,
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள், ஆசிரியர்கள். பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அணிந்து பணியாற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின்
அரசாணை 2004 மற்றும் 2017 நாளிட்ட கடிதங்களின் படி. அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வலியுறுத்தியும்.
அரசு போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்ட ஊழியர்கள் போக்குவரத்து விதிகளின் படி. பணிநேரத்தில் பெயர்வில்லை மற்றும் பணி வில்லை அணிந்து பணிபுரிய வலியுறுத்தியும், கல்லக்குறிச்சி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது,
தமிழ்நாடு அரசு தேர்தலின் போது அறிவித்த பிரதி மாதம் மின் பயனீட்டாளர் அளவு கணக்கிடப்படும் என அறிவித்ததை நடைமுறை படுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பி வைப்பது,
2025 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றக்
கூட்டத்தொடரில்
மக்கள் நல்வாழ்வு துறை மானியக்கோரிக்கையின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் R.C. H. தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாத ஊதியம் ரூ1500/லிருந்து ரூ5000/மாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார் ஆனால் இன்று வரை அரசாணை வெளியிடாத தால் அவர்களுக்கு தக்க ஊதியம் கிடைக்கவில்லை எனவே தமிழக அரசாணை பிறப்பித்து தக்க ஊதியம் வழங்கிட தமிழக அரசைகேட்டுக்கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில். கிளை மாவட்ட. மாநில.நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் பி.கோவிந்தராஜ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
