சென்னை :பெருநகர சென்னை மாநகராட்சி காப்பகம் மற்றும்
4M – அறக்கட்டளை
இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் குருபுரம் என் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி ஆண்கள் காப்பகத்தில் தங்கியுள்ள ஆண்களுக்கு போதை பொருள் உட்கொள்ளவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் மலைராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் 4M அறக்கட்டளை மேலாளர் எம். பெரியதம்பி அவர்கள் தலைமை தாங்கி காப்பகத்தில் தங்கி உள்ளவர்களிடம் போதைக்கு அடிமையானதற்கான காரணங்களை கேட்டறிந்து, போதை பொருள் பயன் படுத்துவதால் ஏற்படும் இழப்பு, குடும்பம் மற்றும் உறவினர்கள் மற்றும் சமுதாயம் புறக்கணிப்பு, சமூகத்தில் ஏற்படும் விளைவுகள், போதைக்கு அடிமையானவர்கள் ஒதுக்கி விடாமல் அவர்களை அரவணைத்து அதில் விடுபட செய்யும் வழிமுறைகளை சிறப்புற எடுத்துரைத்தார்.
மேலும் இன்றைய நவநாகரீக உலகில் போதையினால் பாதிப்படைந்த நபர்களை பட்டியலிட்டு காண்பித்ததுடன் அவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் எடுத்துரைத்தார். போதைப் பொருள் பழக்கத்தால் 40 வினாடிக்கு ஒருவர் புற்று நோயால் இறந்து வருகின்றனர் என கூறினார்.
மேலும் இந்த போதை பொருள் விழிப்புனர்வு கண்காட்சி முகாமை துவக்கி இந்த காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசிப்பவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மனநலம் மற்றும் ஆலோசனை பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து,சிறு, குறு தொழில் செய்வதற்கான பயிற்சி மற்றும் குடும்ப மேம்பாடு குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இறுதியில் 4M அறக்கட்டளை காப்பக ஒருங்கிணைப்பாளர்
ரமணா அவர்கள் நன்றியுரை நல்கினார்.
