கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கல்லக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் மாநில துணைத்தலைவர் ஆர். சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் சிறப்புற நடை பெற்றது.
இதன் பொதுச் செயலாளர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
பல்வேறு விவாதங்களுக்கு பின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
முக்கிய தீர்மானங்கள் : சிவகங்கைமாவட்டத்தில் அப்பாவி இளைஞர் அஜித்குமார் தமிழ்நாடு அரசு காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்,
தமிழக காவல்துறை சட்டத்தை நேர்மையாக செயல்படுத்தவும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி படுத்தி டவும்வேண்டும்,
தமிழக அரசு அப்பாவி அஜித்குமார் கொலை செய்யப்பட்டதை போல தமிழகத்தில் வேறு எங்கும் நடக்காமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
அஜீத்குமார் கொலையில் தொடர்புடைய நிகிதா,காவல் உயர் அதிகாரிகள் அனைவரையும் பாரபட்சம் இன்றி கைது செய்ய வேண்டும்,
அரசு ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை கைது செய்வதும், காவல்
துறையினர் தவறு செய்தால் அவர்களை கைது செய்யாமல் இடமாற்றம் செய்வதும் என்கிற அரசின் தவறான செயல்பாட்டை கைவிட்டு,தவறு செய்தால் பாரபட்சம் இன்றி கைது செய்து வழக்கு தொடர வேண்டும்,
விருதுநகர் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நிகழ்வதும்,
உயிர்கள் பலியாவதும், வாடிக்கையாகிவிட்டது.இது ஏற்புடையதல்ல
பட்டாசு ஆலைகள் நேர்மையான அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு,
போதிய பாதுகாப்பு இல்லாத ஆலைகளை மூடிடவும், பணியாளர் களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிடவும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து உணவு விடுதிகள், மற்றும் பெரு நகரங்கள், நகர்ப்புறங்களில் உள்ள மாமிச உணவு விடுதி களை திடீர் ஆய்வு செய்து. உணவுப் பண்டங்களின் தரத்தை ஆய்வு செய்தும்,தவறு நடந்த உணவு விடுதிகளை பொது விளம்பரம் செய்து நிரந்தர மாக மூடிட வேண்டும்,
கல்லக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட உள்ள புறநகர் பேருந்து நிலையம், தினசரி நாளங்காடி இவைகள் தரமாகவும், அனைத்து வசதிகளும் கொண்டதாகவும் அமைத்திட வேண்டும்,
கல்லக்குறிச்சி சுற்றுவட்ட பாதைப் பணி, பாதாள சாக்கடை திட்ட பணிகளை உடனே துவக்கி தரமான வகைகளாக முடித்திட வேண்டும்,
கல்லக்குறிச்சி,சின்னசேலம்,
தியாகதுருகம்.எலவனார்
கோட்டை,திருக்கோவிலூர்,சங்கராபுரம்,உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக சாலை ஆக்கிரமிப்பு களை அகற்றிட வேண்டும்,
மத்திய அரசு, மாநில அரசு களுக்கு தரவேண்டிய கல்வித் தொகை, ஜி. எஸ். டி. நிலுவைத் தொகைகளை உடனடியாக விடுவிப்ப்பதோடுமாணவர்கள் பெற்றிட்ட வங்கி கல்வி கடன் களை நிபந்தனைகள் ஏதுமின்றி தள்ளுபடி செய்து ஆணையிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில்
பொதுச்செயலாளர். எஸ். கல்யாண சுந்தரம், பொருளாளர். பி. குமார்,அமைப்பு செயலாளர். பி. ஜெயபிரகாஷ், பிரச்சார செயலாளர் டி. கந்தநாதன், மகளிரணி செயலாளர் ஐ. கௌதமி, செயற்குழு உறுப்பினர்கள் செல்வி காமராஜ்,
பரசுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
இறுதியில் நிறுவனர் பொதுச்செயலாளர் முனைவர். மனித நேயர் நா. சு செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புப் ஆற்றினார்.
ஐ. கௌதமி அவர்கள் கலந்துக்கொண்டு நன்றியுரை நல்கினார்.
