சென்னை: மே,11
இன்றைய காலக்கட்டத்தில் ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம், இயற்கை உணவு ஆகியவற்றில் யாரும் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் கொரோனா வைரஸின் வருகைக்கு பிறகு இவையாவும் சற்று மாறி இயற்கை உணவு,ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம் மீது மக்களின் மனநிலை திரும்பியுள்ளது.

திரு.தமீம் அன்சாரி அவர்கள் சிறந்த ஊட்டசத்து ஆலோசகர், உலக சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளுக்கு சொந்தகாரராக திகழந்து வருகிறார்.உடல் ஆரோக்கியம் சார்ந்த அனைத்து ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகிறார். ஆரோக்கியமான எடை, குழந்தைகளுக்கான ஊட்டசத்து, பயிற்சி அரங்குகள் நடத்துவது என பரபரப்பாக இயங்கி வருகிறார்.

இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்சூழழ் அமைய காரணமாக இருந்துள்ளார், சுவர் இருந்தால்தான் சித்திரம்,உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் ஒவ்வொரு மனிதனும் நமது ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.